சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-51
51. நூருத்தீனின் எடிஸ்ஸா மீட்பு நூருத்தீன் அலெப்போவின் அதிபராகப் பொறுப்பு ஏற்ற போது, இமாதுத்தீன் ஸெங்கியின் மரணத்தை அடுத்துச் சிதைந்து போயிருந்த கட்டுக்கோப்பு ஒரு பிரச்சினை ஆக…
அன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
ஸலஹுத்தீன் ஐயூபி! யார் இவர்? ஃபலஸ்தீன், ஜெருஸலம் குறித்த பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம் இவரது பெயர் கொட்டை எழுத்தில் இடம்பிடித்து விடுகிறதே – ஏன்?
எங்கே மற்றொரு ஸலாஹுத்தீன்? வருவாரா மீண்டும் ஒருவர் என்று கட்டுரைகளும் பதிவுகளும் மக்களின் விழிகளும் தேடலும் கேள்வியுமாக அலைபாய்கின்றனவே – எதற்கு?
ஜெருசலத்தை மீட்டார், வென்றார், சிலுவை யுத்தக்காரர்களை விரட்டினார் என்கிறார்களே – எப்படி?
எங்கோ இருந்த ஐரோப்பியர்களுக்கு ஏன் ஜெருசலம் நோக்கி படையெடுப்பு? கலீஃபா எங்கிருந்தார்? ஸெல்ஜுக் துருக்கியர்கள், நூருத்தீன் ஸங்கி, இவர்களுக்கும் ஸலாஹுத்தீனுக்கும் என்ன தொடர்பு?
ஆ சிரியா! என்று இன்று பரபரத்துக் கிடக்கிறதே நிலப்பரப்பு; சிலுவை யுத்தங்களின்போது அந்த டமாஸ்கஸ், அலப்போ களங்களின் நிலை என்ன? அவையும் தெற்கே தொலைவில் இருந்த எகிப்தும் அன்று அந்த அரசியலுக்கு மையப்புள்ளியாய் அமைந்தது ஏன்?
தங்களைத் தோற்கடித்தவர், வீழ்த்தியவர் என்றாலும் தங்கள் எதிரி சுல்தான் ஸலாஹுத்தீனை இன்றும் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்களே மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் – எப்படி நிகழ்ந்தது அந்த மாயம்?
வெகு முக்கியமாக இன்றைய முஸ்லிம்களின் அரசியல் சூழலுக்கும் அன்றைய அரசியல் சூழலுக்கும் வித்தியாசம் என்ன? அட! வித்தியாசம் என்றொன்று இருந்ததா என்ன?
விடையளிக்க வருகிறார் – சுல்தான் ஸலாஹுத்தீன்!
குருதி பெருக்கெடுத்து ஓடும் பரபரப்புத் தொடர்!
விரைவில் இன்ஷா அல்லாஹ்.
ஆசிரியர் – நூருத்தீன்
51. நூருத்தீனின் எடிஸ்ஸா மீட்பு நூருத்தீன் அலெப்போவின் அதிபராகப் பொறுப்பு ஏற்ற போது, இமாதுத்தீன் ஸெங்கியின் மரணத்தை அடுத்துச் சிதைந்து போயிருந்த கட்டுக்கோப்பு ஒரு பிரச்சினை ஆக…
50. யார் இந்த நூருத்தீன் மஹ்மூது ஸெங்கி? மக்ரிபு தொழுகையை முடித்துவிட்டு, தொழுகை விரிப்பில் அமர்ந்திருந்தார் மன்னர். முகத்தில் ஆழ்ந்த சிந்தனையின் நிழல். தரையை இலக்கில்லாமல் துழாவியபடி…
49. இமாதுத்தீன் ஸெங்கியின் மறைவு முதலாம் சிலுவை யுத்தத்திற்குப் பிறகு அரை நூற்றாண்டுக் காலம் கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக முஸ்லிம்களின் ஒருங்கிணைந்த, ஒற்றுமையான எதிர்ப்பு என்பதே இல்லாமல்…
48. எடிஸ்ஸா வெற்றி துருக்கியில் சான்லிஉர்ஃபா மாகாணத்தில் யூப்ரடீஸ் நதிப் படுகையில் இன்று உர்ஃபா (Urfa) எனும் பெயரில் அமைந்துள்ள நகரம்தான் பண்டைய எடிஸ்ஸா.
47. விபரீதக் கூட்டணி டமாஸ்கஸ் நகரில் ஷவ்வால் மாத இரவு ஒன்றில் (ஹி. 533/கி.பி. 1139) மூன்று அடிமைகள், அரண்மனையிலுள்ள அதிபரின் படுக்கை அறையினுள் நுழைந்தனர்.
46. ஸெங்கியின் மறுவெற்றி சிலுவைப் போர்களின் விளைவாகப் பரங்கியர்களுக்கு அறிமுகமான பல விஷயங்களுள் ‘அஸ்ஸா’ எனும் பகடை விளையாட்டும் ஒன்று. எகிப்தின் ஃபிர்அவ்ன்களின் காலத்திலிருந்து மக்களுக்குப் பொழுதுபோக்கு…
45. இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி ஜெருசலத்தின் ராஜா ஃபுல்கு, மற்றும் அவருடைய படையில் எஞ்சியிருந்த சிலரும் ஹும்ஸு நகருக்கு வடமேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்…
44. ஸெங்கியின் மறுதொடக்கம் இமாதுத்தீன் ஸெங்கியை மோஸூலின் தளபதி ஆக்கி, அவரது அரசியல் பிரவேசத்திற்கு அழுத்தமான அடித்தளம் அமைத்துத்தந்த சுல்தான் மஹ்மூத், தமது 26ஆவது வயதிலேயே உலக…
43. இரண்டாம் பால்ட்வினின் மறைவு ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வின், தம் படையைக் கிளப்பிக்கொண்டு வடக்கே அந்தாக்கியா நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
42. பூரித் வம்சாவளி இமாதுத்தீன் ஸெங்கி அலெப்போவினுள் நுழைந்ததும் மேற்கொண்ட முதல் முக்கிய காரியங்களுள் ஒன்று திருமணம். அரசியல், மறுவாழ்வாதாரம் போன்ற பின்னணி கலந்த திருமணம். அலெப்போவின்…
41. இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம் ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகி மரணமடைந்து, அவரை அடுத்து ஆட்சியை ஏற்ற அவருடைய மூத்த மகன் மசூதும் சொற்ப காலத்தில் மரணமடைந்ததும்…
40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப்…
39. பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக் இல்காஸிக்கு ஸுக்மான், அப்துல் ஜப்பார், பஹ்ராம் என்று மூன்று சகோதரர்கள். அவர்களுள் அப்துல் ஜப்பாரின் மகனான பத்ருத் தவ்லா…
38. டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள் இல்காஸியின் நகர்வுகளை மேற்கொண்டு தொடரும் முன் நாம் இங்கு இரண்டு அமைப்புகளைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
37. காழீயின் களப்பணி சர்மதா போரின் வெற்றிச் செய்தி, மதிய தொழுகை நேரத்தில் அலெப்போவை எட்டியது. மகிழ்ச்சியில் திமிலோகப்பட்டது நகரம்!
36. குருதிக் களம் சென்ற அத்தியாயத்தில் துக்தெஜினும் இல்காஸியும் இணைந்து அலெப்போவைக் கைப்பற்றினார்கள் என்று பார்த்தோமில்லையா?
35. ராஜா பால்ட்வினின் முடிவு சென்னாப்ரா யுத்ததில் மவ்தூத் அத்-தூந்தகீனிடம் தோல்வியைத் தழுவிய பரங்கியர்கள், அந்த அனுபவம் தங்களுக்குக் கற்றுத்தந்த பாடத்தை அலசினார்கள்.
34. சென்னாப்ரா யுத்தம் அலெப்போவின் ரித்வான் விடுத்த அபயக்குரல் அப்பழுக்கற்ற வஞ்சகம். அச்சதியை அறியாமல் மவ்தூத் தலைமையிலான படை அலெப்போவை நெருங்கிய போது, இழுத்து மூடப்பட்ட நகரின்…
33. மவ்தூத் பின் அத்-தூந்தகீன் சுல்தான் முஹம்மது, தம் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீனை மோஸுலுக்கு அனுப்பி வைத்தார்; அவர் வந்து சேர்ந்தார்; மக்களால் வரவேற்கப்பட்டார்; ஆட்சிப்…
32. சிலுவைப் படையும் பைஸாந்தியமும் மோஸுல் நகருக்குள் நுழைந்த தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் அந்நகரைத் தமது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, தம் அதிகாரத்தை நிறுவி, சிலுவைப்…
31. கிலிஜ் அர்ஸலானின் முடிவு ஜெகெர்மிஷும் சுக்மானும் ஒன்றிணைந்து போரிட்டு, பிறகு பிணக்கு ஏற்பட்டுத் தத்தம் வழியே பிரிந்து விட்டாலும் அவர்கள் பாலிக் போரில் ஈட்டிய வெற்றி…
30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார்? அது என்ன உதவி? இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய…
மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள் ஹி. 494 / கி.பி. 1101ஆம் ஆண்டு பெரும் எண்ணிக்கையில் திரண்ட சிலுவைப் படை, மூன்று தனிப் பிரிவுகளாகக் கான்ஸ்டண்டினோபிள் வந்து சேர்ந்தது.
28. ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும் சிரியாவில் அலீ இப்னு தாஹிர் அஸ்-ஸுலைமி என்றொரு மார்க்க அறிஞர் வாழ்ந்து வந்தார். முஸ்லிம் உலகை ஈசலாய்ச் சூழ்ந்த சிலுவைப்…
வடக்கே அந்தாக்கியா, எடிஸ்ஸா; தெற்கே ஜெருஸலம் ஆகியன மேற்கத்திய இலத்தீன் கிறிஸ்தவர்களின் ஆளுகைக்குள் வந்துவிட்டன என்று பார்த்தோம்.
26. மெய்ச் சிலுவை இரண்டாயிரம் மைல் கடந்து வந்து, படாத பாடுபட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கு உரியதாகவும் ஆகிவிட்டது.
ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும் மறுநாள் விடிந்தது. போர் தொடர்ந்தது. முந்தைய நாள் ஏமாற்றத்துடன் பின் வாங்கிய ரேமாண்ட், படு உக்கிரமாக முன்னேற முயன்றார்.
ஜெருஸலப் போர் ஜெருஸலம் நகருக்கு அண்மையில், அதன் வடமேற்கே, மத்தியத் தரைக்கடலில் ஜாஃபா துறைமுகம் அமைந்துள்ளது. அது இயற்கைத் துறைமுகம்.
புனித நகரமான ஜெருஸலத்தை நோக்கித் தங்களது அணிவகுப்பின் கடைசிக் கட்டம் தொடங்கியதும் அந்த முதலாம் சிலுவைப் போர்ப் படையினர் மத்தியில் ஓர் அவசர உணர்வு தொற்றியது.
மண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது.