முத்தலாக்கின் மூடுபொருள்
மோகத்திற்கு முப்பதும்ஆசைக்கு அறுபதுமெனதொண்ணூற்றி ஓராம் நாள்திகட்டிற்று வாழ்க்கை சமைந்த நாள்முதல்சமைக்கவே இல்லை போலும்உண்ணக் கொடுத்ததிலெல்லாம்உப்பு, புளி கூடியது துவைத்து உலர்த்தியதுணிமணியிலெல்லாம்ஈர வாடை இருந்ததுஎதிர்ச் சொற்கள் சொல்லியேஎரிச்சல் கூட்டியது
