ஓ, இந்திய முஸ்லிமே! நான் பாபரி மஸ்ஜித் ..

நூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!
என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..
வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்
சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின.

என்னை இந்தியாவின் அவமான சின்னம் என்றார்கள்,
நான் களங்கப் படுத்தபட்டேன்
என்னை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்!

நான் ஷஹீது ஆக்கபட்டேன்….
அல்லாஹுவைத் துதித்து வந்த என் இடத்தின்மேல்
காவிகளின் களியாட்டம் நடக்குதே!

 

ஓ, இந்திய முஸ்லிமே! நான் இந்தியாவின்
நினைவுச் சின்னம் மட்டும் அல்ல;
நான் ஜனநாயக இந்தியாவின் இதயம்…
என்னை நீ இழந்துவிடத் துணிந்துவிட்டால்
இந்தியா இன்னும் பல இறையில்லங்களை இழந்துவிடும்.

என்னை நீ மறந்து விட்டால் …
நீயும் மறக்கடிக்கப்படுவாய்!
ஓ, இந்திய முஸ்லிமே! நீ தூங்கிவிட்டால்
எதிரிகள் விழித்து கொள்வார்கள்
நீ உன் பணியை நிறுத்திக் கொண்டால்
நான் அவமானச் சின்னம் என்ற பொய்யை
உண்மை ஆக்கிவிடுவார்கள்.

ஓ! இந்திய முஸ்லிமே!
என்னுடைய அழுகை சப்தம்
உன் செவிகளை எட்டவில்லையா?
அநியாயக்காரர்களின் பிடியிலிருந்து
என்னை நீ மீட்டு எடுக்கும் காலம் எப்பொழுது?

oOo

ஓ,பாபரியே! உன் அழுகை சப்தம்
எங்கள் காதுகளில் விழுகிறது
நாங்கள் எங்களை வருத்தி, உன் கண்ணீரைத் துடைப்போம்!
எங்கள் உதிரத்தைச் சிந்தி, உன் மினாராவை எழுப்புவோம்!
எங்களை மண்ணில் புதைத்து, உன்னைக் கட்டி எழுப்புவோம்!
இன்னும் கொஞ்ச காலத்தில், இன்ஷா அல்லாஹ்!

– திருவை அன்ஸர்