செய்தி: கடந்த அக்டோபர் 8, 2011 அன்று – ஆயுத பூஜை, விஜய தசமியை முன்னிட்டு இரு நாட்களில், 325 டன் கூடுதல் குப்பைகள் குவிந்ததாக தினமலரின் மதுரை பதிப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=327597
{AF template=white_border width=100% colorize=CCFFFF}செய்தி விமர்சனம்: ஆயுத பூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகள், கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்துள்ள வியாபாரிகளால் பெருமளவில் மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய பண்டிகைகளுக்கென்று சிறப்புமலர், விசேஷ இணைப்பு வெளியிட்டு காசு பார்க்கும் தினமலர் போன்ற பத்திரிகைகளும் இதில் விதிவிலக்கல்ல.
இதே போன்று தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது, விலங்குகள் பறவையினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதும், சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்துவதுடன் நில்லாமல் பலரின் உயிருக்கே உலை வைக்கும் செய்திகளும் தீபாவளிக்கு மறுநாள் ஏராளமாக வெளியாவதைக் காணமுடிகிறது. இதைவிட கொடுமை, கடவுள் என்று கருதி மனிதனே தன் கையினால் உருவாக்கும் ஆயிரக்கணக்கான பிள்ளையார் சிலைகள், விநாயகர் சதுர்த்தியன்று கடலில் கலக்க விடும் போது சுற்றுப்புறச் சூழலுக்கு நேரும் அபாயம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை. {/AF}