
அரஃபாத் 1987
அன்றையக் கதிரவன்அனலாய்க் கொதித்தது;அரஃபாத் பெருவெளியில்அக்கினி உதிர்த்தது! பதிவுசெய்த ஏற்பாட்டில் பயணம் வந்தவர்கள்கூம்பியக் கூரைகொண்டகூடாரங்களிலோகுளிரூட்டப்பட்டக் குடில்களிலோகுழுமி யிருக்க நாங்களோ பாலங்களின் மேலோபாலக்கண்ணின் கீழோஈருடையில்மேலுடை விரித்து,தாழ்வாரமிட்டு,சூடான நிழலுக்குள்சுருண்டிருந்தோம்