இதோ, மீண்டும் அவர்கள் வருகின்றார்கள்!

வர்கள்‬
துரத்தப்பட வேண்டியவர்கள் !
படையெடுத்தவர்களின் வாரிசுகள் !
மன மாற்றக் காரர்கள் !
கோமாதாக்களின்  எதிரிகள் !

வெடிப்புகளை நேசிப்பவர்கள் !
இணைப்புகளை எதிர்ப்பவர்கள் !
தேசப்பற்றுக்குப் பொல்லாதோர் !
ஒற்றுமைக் குணம் இல்லாதோர் !”

என்றெல்லாம்
பொய்களைப் பரப்பித்தான்
எம் மசூதிகளில் ஒன்றை
பலி கொண்டார்கள்
அந்தக் கயவர்கள் !

ஏதும் அறியாத உங்கள்
கரங்களைக் கொண்டே
ரணப்படுத்தினார்கள்
எம்  இல்லங்களையும்
உள்ளங்களையும்..!

அவர்தம்
கயமைகளையும்
புனைவுகளையும்
இப்போதாகினும் புரிந்து கொண்டீரா
என் சொந்தங்களே.!!

இடிப்புக்களையும்
வெடிப்புகளையுமல்ல.!
நாங்கள்
உள்ளங்களையும் –
சேவைகளையுமே
நேசிக்கிறோம்.!

ஆண்டவன் மீதான நம்பிக்கையே
உதவும் முனைப்புகளுக்கான
உந்துசக்தி..!

இறைத்தூதரின் வழிகாட்டுதல்
மேல் கொண்டுள்ள நேசம்.!
உண்மையில் எமக்கு சுவாசம்.!

எம் இறை நம்பிக்கையின்
வெளிப்பாடுகளும் – கடப்பாடுகளுமே.!
உடன் வாழும்
உயிர்த் தோழமைகளான
மக்கள் மீதான நேசம்..!

அலங்காரப் பூச்சுக்களிலும்
ஏமாற்று பசப்புகளிலும்
வெறுப்பை விதைக்கும் மோசடிகளிலும்
ரணங்களை பரப்பும் செயல்களிலும்
எப்போதும் எமக்கு அனுபவங்களில்லை.!

இதோ.!
அடுத்த பரபரப்பைப் பற்ற வைக்க
ஆலோசனைகளுக்காய் அவர்கள்
மூளையைக் கசக்குகிறார்கள்.!

நாங்கள் தரப்போவதில்லை..!
இம்முறை அவர்களுக்கான மறுப்பை..!

‪ஆனால்,
அவர்தம் சதிச் சூழ்ச்சிகளில்
நிச்சயம் தோற்பார்கள் என்பதாய்
மனம் நிறைந்த நம்பிக்கைகளுடன்,

‪‎பாகிஸ்தானுக்கும் கபர்ஸ்தானுக்கும்
ஓடிப்போக தேவையில்லாத
மாமன் மச்சான் உறவுகள்.!

– அப்பாஸ் அல் ஆஸாதி

அழுவதற்கான நேரம் கடந்துவிட்டது!