மயான அமைதி (கவிதை)

கொடூரம்
கொடூரம்
கொடூரம்

அடுத்தவர் தசை தின்பதிலும்…
குடில்களை பிசாசு பண்ணுவதிலும்…
பல தசாப்தமாக
தலைமை பன்றிக்கும்
ஏனைய மற்றும்
குட்டிப் பன்றிகளுக்கும் மகிழ்வு.

சுனாமி கக்கிய
நெருப்பில்
ஊர் பேரிருள் கிடக்க
இருத்தலுக்கான விடுதலை யாத்திரை
என்கின்ற பெயரில்…
நுனியகற்றப்பட்டவனும்…
முக்காடிடப்பட்டவளும்…
இருத்தலின்றி

பன்றிகளை விரட்ட
நாய்கள் வந்தன…
கடும் சமர்…
அழகான ஊர்
மூதூர்
மயான முகவரியாய்
முகம் புதைந்திற்று.

சில நேரங்களில்
பன்றிகள் வென்றிருக்கலாம்!
சில நேரங்களில்
நாய்கள் வென்றிருக்கலாம்!
ஆனால்…
தெருவோரத்து அகதிகளாய்
தோற்றுக் கிடப்பது
கலிமா முகங்கள் தான்.

நாயென்றால் என்ன!
பன்றியென்றால் என்ன!
சோனகனுக்கு
இரண்டும் நஜீஸ் தான்!

ஆக்கம்: இறைநேசன்
நன்றி : எங்கள் தேசம்(ஆகஸ்ட் 15-31)