இரு கண்களாய் –
குர்ஆன், சுன்னத்.
சிந்திக்கும் மனிதர்கள்
விரல்களாய்,
பற்றிப் பிடித்தன
இஸ்லாமை.
தோழர்கள்
கால்களால்
கடல் தாண்டியும்
களத்திற்காகவும்
கடமையாற்றுகிறார்கள்.
சதையாய்
நரம்பாய்
வீரியமாய்
இளைஞர்கள்.
குருதியாய்
ஈமான்…
ஈரக்குலைகளாய்
உறவுகள்
சரித்திரம் செமிக்கப்படுகின்றது
சத்தியம் சேமிக்கப்படுகின்றது
நேர்மை சுவாசிக்கப்படுகின்றது
ஓருடலாய்
ஓரிறை வணங்கும்,
உன்னத நபியின்
உம்மத்.
துடிக்க மறந்ததா
“ஒற்றுமை”
எனும் இதயம்?
கவிதை: சகோதரி உம்மு ஹிபா