இறுதி வடிவம்

Share this:

ப்படி இருக்கும்
முதுமை
இறப்பை எதிர்நோக்கிய
தனிமை?

அனாயாசமான
அனிச்சை சுவாசம்
பிரயாசையாகிப் போகுமோ – மூச்சு
இழுக்கவும் விடவும்
முயற்சி தேவைப்படுமோ

ஓடியாடியது போதுமென
ஓய்ந்திருக்கத் தோன்றுமோ – உடல்
ஒவ்வோர் இடத்திலும்
விட்டுவிட்டு வலிப்பது
பழகித்தான்  போகுமோ

நடக்க முடியாமல்
உட்கார்ந் திருக்க விரும்புமோ
இருப்புக் கொள்ளாமல் – மனம்
படுத்துறங்க நாடுமோ

படுக்கை முட்களாகி
புரட்டிப்புரட்டிப் போடுமோ
உறக்கம் இமைக்கு வெளியே
விளையாட்டுக் காட்டுமோ

வாழ்ந்ததெல்லாம்
விழித்திரையில்
வரிசையாகத் தோன்றுமோ – வாழ்ந்த
வாழ்க்கை வந்து நின்று
பரிகாசம் செய்யுமோ

பார்வை மங்கிப்போய்
பரிச்சயம் பிழையாகுமோ – நில்லாமல்
அலைபாய்ந்த விழியிரண்டும்
நிலைகுத்திப் பார்க்குமோ

குழந்தைகளின் ஆரவாரம்
கூச்சலென வதைக்குமோ
சப்தம்கூட்டிப் பேசச்சொல்லி – கை
காதுமடல் தாங்குமோ

சுமந்து சென்ற கால்களிலும்
சுணக்கம்தான் நிலைக்குமோ – இனி
மூன்றாம் காலொன்று
முதற்கையில் முளைக்குமோ

மறுமையை மறந்து மனம்
மருந்துகளை நாடுமோ – வெறுத்து
ஒதுக்கிவைத்தச் சொந்தபந்தம்
ஒன்றுகூட ஏங்குமோ

பயணச் சுமைதனிலே
பாவங்கள் கூடிடுமோ – இல்லை
படைத்தவன் நினைப்பு மிகுந்து
பயம் வந்து சேருமோ

எப்படி இருக்கும்
மறுமை – உறுதியாகிவிட்ட
இறப்பை எதிர்நோக்கி நிற்கும்
ஒருமை?


– சபீர்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.