ஒவ்வொரு நாளும் பெண்கள் தினமே!

றைப்பதில் அல்ல,

இயன்றவரை திறப்பதில்தான் சுதந்திரம்
என்பதாகத் திணிக்கப்படுகிறோம்!

ஆடை அணிவதில் அல்ல! ,
இயன்றவரை களைவதே நாகரிகம் என
உலராச் சலவை செய்யப்படுகிறது
நம் மூளைகள்!


குடும்பமா?
தேவையில்லை!
கட்டுக்குள் சிக்காமல்
சுதந்திரமாக சுற்றித்திரி!
எங்கும் எவரோடும் உறவு கொள்ள
உரிமையுண்டு உனக்கு
என உயர்த்திப் பிடிக்கிறார்கள்
உரிமைக் குரலென!

முன் பின் பழகாமல், திருமணமா?
கட்டுப்பெட்டித்தனம் அது!
எல்லாவற்றையும் பழகி,
கலந்து, இழந்தபின் தேர்ந்தெடு!
அதுதான் டேட்டிங் என்ற
மந்திரச்சொல் என்பதாய்
ஏற்றப்படுகிறது நம் மனங்கள் கழுவில்!

காதலின்றிக் கல்லூரிவாயில்
நுழைதலும், வெளி வருதலும்
கலாச்சார இழுக்காம்!
நாகரிகம் முன்னேற்றம் அல்லவாம்!
சினிமாக்கள் பிதற்றும்
மற்றுமொரு மாயவலை இது!

பொது வெளியில் உடை களைதல்
முன்னேற்றமல்ல!

தொலைத்து தொலைத்து விளையாட
கற்பு ஒன்றும் காற்றுக் குமிழி அல்ல!

மேலை நாடுகள்
படும் பாடுகள் நாமறிவோம்!
குடும்ப உறவுகள் இன்றி
வாழ்தலில் பலனேது?

இளமையைத் தொலைத்து,
முதுமையில் வருந்தும் நிலை
நமக்கும் வேண்டாம்.

நாம் போகப் பொருளல்ல!
காட்சிப் பொருளல்ல!
கடைச்சரக்கல்ல!
விற்பனைப் பண்டமல்ல!
என்பதை மனதில் கொண்டால்,
கழியும் ஒவ்வொரு நாளும்
பெண்கள் தினமே!

நன்றி -Abbas Al Azadi – http://tknews.in/?p=1642