என்றும் இறைபணியில்…

Share this:

{mosimage}கல்லாதது உலகளவு என்ற மானிட
கவலைதனை மறந்திடுவோம் – நாம்
கற்ற நற்கருத்துக்களை பிறர் கண் முன்
நிறுத்திடுவோம் – கனிவு கொள்வோம்!

மார்க்கப்பணி செய்வதொன்றே
மட்டில்லா மகிழ்ச்சியென்று – மனமிசைந்து
முன்வந்து மாண்புடனே கடமையாற்றும்
மறையோதும் அனைவருக்கும்!

ஊக்கம் தந்து, உயரிய ஞானம் தந்து
உள்ளத்தெளிவு தந்து உயர்த்திவிட்ட
ஓரிறை அல்லாஹ்விற்கே
உன்னத புகழைனைத்தும்!

இஸ்லாத்தில் சோதரராய் – இந்த
இணையத்தில் கைகோர்த்து – நாம்
என்றென்றும் இணைந்து வாழ – அந்த
இறையோனை இறைஞ்சிடுவோம்!

இம்மையிலும் மறுமையிலும் – நாம்
இனிதாய் வாழ்ந்திடவே – ஐவேளை
தொழுதிடுவோம் அவனளித்த – வான்
மறையோதி மகிழ்ந்திடுவோம்!

பயணம் தொடர்ந்திடவே – அல்லாஹ்வின்
பாதுகாப்பை நாடிடுவோம் – அவன்
பார்வையில் நிதம் நாம் படவே
பாரினிலே இறை பணிகள் செய்வோம்!

இன்னலை எளிதாக்கும் – வல்ல
ரஹ்மானின் திருப்தியை பெற்றிடவே
முஸ்லிமாய் நாம் வாழ்வோம் – தூதர்
முஹம்மது நபி (ஸல்) வழி நடப்போம்!!

ஆக்கம்

அபு ஷிஃபா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.