108 பேரின்பத் தடாகம்!

Share this:

தகிக்கின்றத் தாகம்
தணிக்கின்றத் தடாகம்;
பசிக்கின்ற நேரம்
புசித்திட ஹலாலும்;

நினைக்கின்ற யாவும்
கிடைக்கின்ற யோகம்;
அளிக்கின்ற ஒருவன்
அவனே உம் நாயன்!

அவனையே தொழுது
அபயம்கேட் டழுது;
அவனுக்காகவே அறுத்து
அவன் பெயரில் கொடுப்பீர் !

உமக்கெதிரி எவரோ
அவர்க்கில்லை உறவு
தமக்குப்பின் தொடர்பு
தடுக்கப்பட்டச் சந்ததி

உத்தமர் உம் வழியை
உண்மையென் றறிந்து
உமக்குப் பின்னாலே
உலகமே திரளும் !

oOo

(மூலம்: அல் குர்ஆன் / சூரா 108: அல்கவ்தர்)

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.