"வெளிநாட்டு உறவு உட்பட, எவ்வித தொடர்பும் அந்த பயங்கரவாத நாட்டோடு வைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. லெபனானிலும், பாலஸ்தீனிலும் அப்பாவி மக்களை கொடூரமாக கொன்றொழிக்கும் இஸ்ரேலுக்கு பைத்தியம் பிடித்துள்ளது" என்று அவர் இஸ்ரேலை கடுமையாக சாடினார்.
இதற்கு முன் வெனிசுலா, இஸ்ரேலிலிருந்து தனது தூதரை திரும்ப பெற்றுக் கொண்டு இஸ்ரேலின் லெபனான் மீதான அராஜகத் தாக்குதலைக் கடுமையாக கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் மனித உரிமை மீறல்களை வெனிசுலா கண்டிக்கும் முகமாக இம்முடிவை எடுத்துள்ளதாக ஷாவேஸ் அறிவித்தார். இஸ்ரேல் லெபனானில் நடத்தும் பயங்கரவாதத்தை இன சுத்திகரிப்புடன் ஒப்பிட்ட அவர், ஹிட்லர் யூதர்களை கூட்டம் கூட்டமாக கொன்றொழித்ததை நினைவில் கொண்டுள்ள யூதர்கள், தற்போது அது போன்ற ஓர் செயலில் அவர்களே ஈடுபடுவது பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்று அவர் இஸ்ரேல் மீது சாடியுள்ளார்.
இஸ்ரேல் உலக சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல், லெபனான் மற்றும் பாலஸ்தீன் நாடுகளின் அப்பாவி மக்களின் மீது புரியும் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத உலக நாடுகளை அவர் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
லெபனானின் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக உலகின் எந்த நாடும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத இத்தருணத்தில், வெனிசுலா இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களுடன் இவ்வாறு களமிறங்கியிருப்பது முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
-சத்தியமார்க்கம் செய்திக்குழு