ஈரான் எச்சரிக்கை: அணு ஆயுத பரிசோதனையை தொடரும்!

{mosimage}ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத எரிபொருள் பரிசோதனை மற்றும் அபிவிருத்திக்கான முயற்சிகளை ஆகஸ்ட் 31-க்குள் நிறுத்திக்கொள்ளவில்லையெனில் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கண்டனத் தீர்மானத்திற்கு அடிபணிந்து, தமது நாடு யுரேனிய உற்பத்தி மற்றும் அபிவிருத்திக்கான (Uranium Enrichment) முயற்சியில் இருந்து பின்வாங்காது என்று ஈரான் அறைக்கூவல் விடுத்துள்ளது.

ஈரானியர்களுக்கான அணு ஆயுத உரிமைகளின் அடிப்படையிலேயே எங்கள் நடவடிக்கைகள் அமைந்துள்ளதால் இம்முயற்சியை நிறுத்துவது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அணு ஆயுத பரிசோதனைக்கான தலைமை நிர்வாகி அலி லாரிஜானி செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில் "ஈரானின் அணு ஆயுதப் பரிசோதனைக்கு எதிராக குரல் எழுப்பும் நாடுகளின் மீது ஈரான் தனது எண்ணை வளத்தையே ஆயுதமாகப் பயன்படுத்தும்" என்றார். அத்தகைய தீர்மானத்தை ஈரான் (தான் எண்ணையை வினியோகிக்கும் நாடுகளின் மீது) எடுத்தால் அதன் விளைவுகளும், பொருளாதார பாதிப்புகளும் முழு உலகையும் மிகக்கடுமையாக தாக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் அணு ஆயுத அபிவிருத்திக்கான பரிசோதனையை நிறுத்திக்கொண்டால் தம் நாட்டின் மூலம் வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தினைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பை ஈரானுக்கு அளிப்பதாக உறுதி அளிக்கும் பெரும் ஒப்பந்தத்தை அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்ய நாடுகள் ஈரானிடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.