1. ஒரு கோப்பினை (Word Document) திறவுங்கள்,
2. RESIZE பொத்தானை அழுத்தி அந்தச் சட்டத்தை (Document Window) சிறிதாக்குங்கள்,
3. ஏதாவது ஒரு பத்தியை (Paragraph) தேர்ந்தெடுத்துக்கொண்டு, பின்பு அதை DRAG செய்து டெஸ்க்டாப்பில் (Desktop) உள்ள ஐகொன்களுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் போடுங்கள். தேவையெனில், CUT/COPY&PASTE முறையையும் பயன்படுத்தலாம்.
இப்போது டெஸ்க்டாப்பில் (Desktop), படத்தில் இருப்பது போன்ற, நீல மற்றும் மஞ்சள் கோடு போட்ட ஐகான் (icon), Document Scrap என்று ஆரம்பித்து, உங்கள் கோப்பின் பெயர் (Document Name) கொண்ட தலைப்புடன் உருவாகி விடும்.
பின்பு தேவைப்படும்போது அதை மவுஸினால் இருமுறை சொடுக்கினால் (Double Click), அது Word கோப்பில் திறக்கப்பட்டு காட்சியளிக்கும். அதை தேவைக்கேற்றாற் போல் மாற்றி சேமித்து (SAVE) கொள்ளலாம், அல்லது வேலை செய்துகொண்டிருக்கும் கோப்பில் (Word Document) DRAG/DROP செய்து தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
ஆக்கம்: முஹம்மத் அலி ஜின்னா