உலகிலேயே மோசமான மனிதன் யார்?

உலகிலேயே மோசமான மனிதன் யார்? என்ற ஒரு வித்தியாசமான போட்டி மூன்று நண்பர்களுக்குள் ஏற்பட்டது.

ஒருவன் அதனை நிரூபிப்பதற்காக, ஒரு பெண்ணைப் பிடித்து அவள் வாயிலுள்ள பற்களெல்லாம் கொட்டிப்போய் முகமெல்லாம் ரத்தமாக மாறும் வரை அடித்துக் கொண்டேயிருந்தான். அடியின் வலி தாளமுடியாமல், இறுதியில் அப்பெண் மயக்கமுற்றாள்.

இப்பொழுது மற்றவர்கள் பக்கம் திரும்பி “உங்களில் மோசமானவன் நான்தான்” என்றான்.

அதைப்பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் ஓரடி முன்னே வந்து, இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை மானபங்கப்படுத்தி, அவள் உயிர் போகின்றவரையில் மீண்டும் மீண்டும் அடித்தான்.

பின்னர் மற்றவர்கள் பக்கம் திரும்பி “என்னை விட மோசமானவன் வேறு யாருமில்லை” என்று பெருமிதத்துடன் கூறினான்.

அதுவரை வாய்மூடி மவுனமாக இருந்த மூன்றாமவனோ “இல்லை. இவ்வளவு நேரம் இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான்தான் உங்கள் எல்லோரையும் விட  மோசமானவன். ஏனெனில் இப்பெண் என் தங்கை என்றான்.

இச்சம்பவத்தை இப்படி யோசித்துப்பார்த்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த அப்பெண் – லெபனான் & பாலஸ்தீன்.

முதல் மனிதன் – இஸ்ரேல்.

இரண்டாவது மனிதன் – மேற்கத்திய நாடுகள்.

மூன்றாவது மனிதன் – அரபுலகம் (சக சகோதரனுக்கு உயிர் போகும் துன்பத்திலும் மவுனம் காத்த வாயில்லா பிராணிகள்).

(மின்னஞ்சலில் வந்த ஒரு தகவலின் தமிழாக்கம்)

– அபூ ஸாலிஹா