{mosimage}உலகம் அவ்வாறு நம்பிக்கைக் கொள்ளலாம். இஸ்ரேலும் அவ்விதமே கருதிக் கொள்ளலாம். இன்று காலை(14/08/2006) 6 மணி முதல் நிலுவையில் வரும் வெடி நிறுத்தல் கடந்த 30 நாட்களாக தொடரும் லபனானின் மீதான இஸ்ரேல் புரியும் மோசமான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால் யதார்த்தம் வேறாகும். இதில் யாருக்கும் ஒரு சந்தேகமும் வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் ஹிஸ்புல்லாவின் ஆக்ரோசமான எதிர் தாக்குதலை சந்தித்து தலையில் கை வைத்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல், அதனுடைய வரலாற்றில் மிகவும் பலமான கொரில்லா யுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இந்த போராட்டத்தில் அவர்கள் தோற்பதற்கே சாத்தியம் அதிகம். இரு தினங்களுக்கு முன் 39 இஸ்ரேலிய படையினர் ஹிஸ்புல்லா போராளிகளால் கொல்லப்பட்டனர். அது 43 என்றும் கூறப்படுகிறது. ஹிஸ்புல்லா தற்பொழுதும் ராக்கட்டுகளை இஸ்ரேலிய படையினரை நோக்கி அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறது.
தாங்கள் லித்தானி நதிக்கு தெற்கே உள்ள போராளிகளை துடைத்து நீக்கிக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவ மேதாவிகள் கூறுகின்றனர். ஆனால் அப்பணியை செவ்வனே நிறைவேற்றுவது ஹிஸ்புல்லா தான். சனிக்கிழமை அவர்கள் சுட்டு வீழ்த்திய இஸ்ரேலின் ஹெலிக்காரில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களைக் கூட மீட்டெடுப்பதற்கு இஸ்ரேலால் முடியவில்லை. அதிகாரப்பூர்வமாக வெடி நிறுத்தல் தீர்மானத்தை இஸ்ரேல் அங்கீகரிப்பதாக கூறியிருக்கிறது. ஹிஸ்புல்லாவும் வெடி நிறுத்தலை கடைபிடிப்பதாக கூறுகிறது, ஆனால் அதற்கு ஒரு இஸ்ரேலிய சிப்பாயும் லபனானில் இருக்கக்கூடாது என ஹிஸ்புல்லாவினர் கூறுகின்றனர். இப்பொழுது லபனானில் 10000 இஸ்ரேலிய இராணுவத்தினர் உள்ளதாக கணக்குகள் தெரிவிக்கின்றன. இதில் ஒவ்வொரு சிப்பாயும் ஹிஸ்புல்லாவின் இலக்காகும்.
நேற்று காலை முதல் ஆக்ரமிப்புப்படைக்கு எதிராகத் தான் ஹிஸ்புல்லாவினர் போராடுகின்றனர். லபனானை தகர்த்த எஃப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்த முடியாத கோபம் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு உண்டு. அதனால் அவர்கள் இஸ்ரேலிகளை காத்திருக்கின்றனர். ஒரு நாளில் 40 சிப்பாய்களை பலி கொடுக்க இஸ்ரேலால் முடியுமா? இங்கு முடிந்திருக்கிறது. மிகவும் தந்திரமான ஓர் படை நீக்கத்தைத் தான் ஹிஸ்புல்லாவினர் செய்தனர். அவர்களின் ஆயிரக்கணக்கான போராளிகள் தெற்கு லபனானின் குன்று பகுதிகளில் தயாராக நிற்கின்றனர். லித்தானி நதிக்கரையின் ஓரங்களில் இஸ்ரேலியர்களை எதிர்பார்த்து தன்னுடைய படையினர் காத்திருப்பதாக ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ருல்லா இஸ்ரேலுக்கு கடந்த சனிக்கிழமை முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தார். மூன்று மணித் துளிகளுக்குள் அவர்கள் தயாராக்கி வைத்திருந்த குழிக்குள் இஸ்ரேலிய படை சென்று விழுந்தது. 20 இஸ்ரேலியபடையினர் கொல்லப்பட்டனர். தரைத் தாக்குதல் தொடங்கியதோடு இஸ்ரேலின் கணக்குகள் தப்பின. விமானத்தின் மூலம் குண்டுமழை பொழிந்து தளர்ந்த பின் இஸ்ரேல் தரைப்படையை களத்தில் இறக்குமென்றும் அப்பொழுது அவர்களுடன் நேருக்கு நேர் யுத்தம் செய்யலாம் என்றும் ஹிஸ்புல்லா படையினர் முன்பே தீர்மானித்து இருந்தனர்.
ஈரான் தயாரிப்பான லேசர் கைடட் மிஸைல்களை ஹிஸ்புல்லாவினர் உபயோகிக்கத் தொடங்கியதோடு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கிடையில் பயமும் அங்கலாய்ப்பும் உருவானது. ஹிஸ்புல்லாவினர் அவர்களின் ஹெலிக்கார் ஒன்றினை வெடி வைத்து தகர்ப்பது இது முதல் முறையாகும். இதற்கிடையில் இஸ்ரேல் தனது அக்கிரமங்களை ஒரு பக்கம் தொடர்கின்றது. வெடி நிறுத்தல் நடைமுறைக்கு வருவதற்கு முன் அதிகபட்சம் லபனானில் எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவுக்கு அக்கிரமத்தை கட்டவிழ்த்து விடத் தொடங்கியுள்ளது.
600 கிறிஸ்தவ குடும்பங்கள் அடங்கிய ஒரு அகதி குழு தெற்கு பகுதியிலுள்ள மர்ஜாயூனில் இருந்து வடக்கு பகுதிக்கு போகும் பொழுது ஒரு இஸ்ரேலிய யுத்த விமானம் அவர்கள் மீது குண்டு மழை பொழிந்தது. 7 பேர் அதில் கொல்லப்பட்டனர். அதில் மேயரின் மனைவியும் அடங்கியிருந்தார். மேற்கு பெய்ரூட்டில் 6 குடும்பங்கள் வசித்திருந்த ஒரு 7 மாடி கட்டிடத்தை இஸ்ரேல் தகர்த்தது. தெற்கு லபனானில் ஒரு அம்மா மற்றும் அவருடைய குழந்தைகள் உட்பட 12 அப்பாவிகளை அவர்கள் கொன்றனர். முஸ்லிம் உலகத்தின் வீர நாயகர்களும், அமெரிக்காவின் தீவிரவாதிகளுமான ஹிஸ்புல்லா போராளிகளுக்கு இஸ்ரேல் செய்த பல கொலைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் இஸ்ரேலிய சைனியத்தை மட்டுமே குறி வைக்கின்றனர்.
வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலகட்டத்தில் இஸ்ரேலிய படைகளுக்கு தங்களுடைய சொந்த நாட்டை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெடி நிறுத்தம் தோல்வியடையும் பொழுது(அது நிச்சயமாக நடக்கும்) இஸ்ரேலியருக்கும் அமெரிக்கருக்கும் அதனுடைய பின் விளைவுகளிலிருந்து தப்பிக்க ஒரு வழியும் இல்லை. ஹிஸ்புல்லாவிற்கு துணை புரியும் ஈரான் மற்றும் சிரியாவை அவமானத்திற்குள்ளாக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் லட்சியமாக இருந்தது. ஆனால் நடந்ததோ நேர் எதிரானதாகும். பாலங்களையும், கட்டிடங்களையும் தகர்ப்பதிலும், பொது மக்களை கொல்வதிலும் மட்டுமே இஸ்ரேலிகள் கவனம் செலுத்தினர். அவர்களின் பார்வையில் உள்ள "தீவிரவாதிகளை" ஒடுக்குவதில் அவர்கள் மிகப்பெரும் தோல்வியைத்தான் சந்தித்திருக்கின்றனர். அதனால்தான் நான் கூறுகிறேன், "உண்மையான லபனான் யுத்தம் இன்று ஆரம்பமாகிறது".