அரபுலகின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி பதவியேற்பு!

அரபுலகின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி பதவியேற்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மை நீதிபதியாக குலூத் அல் தாஹேரி என்ற முஸ்லிம் பெண் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இது, கல்வியிலும் அரசு அலுவல்களிலும் முஸ்லிம் பெண்களின் முக்கியப் பங்கை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 

கடந்த 07.10.2008 அன்று நடந்த நிகழ்ச்சியில், UAE இன் மாநிலங்கள் அவைத் தலைவரும் அபூதபி நீதிமன்றங்களின் அமைப்புத் தலைவருமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள் முன்னிலையில், முதன்மை நீதிபதிப் பதவியினை குலூத் அஹ்மத் ஜுஆன் அல் தாஹேரி என்ற பெண்மணி ஏற்றுக் கொண்டார்

 

இந்நிகழ்ச்சியில் பேசிய ஷேக் மன்சூர் அவர்கள்நீதிமன்றங்களுக்குரிய அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்குச் சமமான இடங்களில் பெண்களும் இடம்பெற உற்சாகமூட்டும் வண்ணம் முதன்மை நீதிபதியாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல் பெண் நீதிபதியாகப் பொறுப்பேற்றுச் சரித்திரம் படைத்திருக்கும் இப்பெண்மணிக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் நீதித்துறை அளிக்கும்!” என்று தெரிவித்துள்ளார்.

 

அரபுநாடுகளில் பெண்கள் அடக்கி ஒடுக்கப் படுகின்றனர்என்ற மேற்கத்திய அறிவுசீவி ஓநாய்களின் அழுகைக்கு ஆப்பு வைக்கும் வகையில் அமைந்த இச்சம்பவம் அரசியல் விமர்சகர்களால் ஆச்சரியத்துடன் உற்று நோக்கப் படுகிறது.

 

கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் இஸ்லாத்தில், ஆண்பெண் பாகுபாடின்றி அனைவரும் கல்வி கற்கக் கடமைப் பட்டவர்கள் என்பதும் தகுதியுடையவர்கள் யாராயிருப்பினும் அவர்களைத் தேடி எத்தகைய பதவியும் வந்து சேரும் என்பதையும் இச்சம்பவம் உணர்த்துகின்றது.

 

(பொறுப்பேற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் சத்தியப்பிரமாணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் UAE இன் முதல் பெண் முதன்மை நீதிபதி குலூத் அல் தாஹேரி மற்றும் ஷேக் மன்சூர் அவர்கள்)