இறை அருளைத் தேடுங்கள்! (கவிதை)

Share this:

கலிமாவைக் கருவாக்கி

கலந்து நின்றோம் கண்மணிகளாய்

கருத்து வேற்றுமையால்

கண்டும் காணாமல் போகின்றோம்- தீனில்

கற்றதை மறக்கின்றோம்—"ஸலாம்"

கூற மறுக்கின்றோம்.!!! 

 

நமது நபி

நவின்றது (நபிவழி ) இதுதானா?

நபிவழியின் சுவடொற்றி

நலம் விசாரிக்க- இன்று

நாவு எழவில்லை.!!! 
 

இலக்கணம் இதுதானா? மூமினுக்கு

இலக்கு எது ? சுவனமன்றோ ?

"இறையச்சம்"

இதயத்தில் ஊன்றி விட்டால்

இழப்பும் இன்பமாகும்

இறப்பும் துச்சமாகும்

இஸ்லாமியர்களை மன்னிப்பதும்

இசைவாகும்.

இதயத்தில் இறையச்சம் உறுதியாகும். 
 
 

சகோத(ரத்து)-வம்

சத்திய மார்க்கத்தில் ஓர்

சங்கட முள் !!! 
 

சந்தோஷமாய் ஒன்றுபட்டு

சங்கடமில்லாமல் சங்கமிக்கும்

சகோதரத்துவத்துடன், தக்பீர் முழக்கமிடும்

சமுதாயம்

சட்டென்று வந்துவிடும்… 
 
 

சன்மார்க்கத்தை தந்திட்ட இறைவன் நாடினால்

சட்டென்றே வந்துவிடும் நாளைக்கே ! 
இறுமாப்பை முழுமையாக எட்டி வீழ்த்தி

இஸ்லாத்தை நிலைநாட்டிட

இறையருளைத் தேடி வாரீர்.

ஆக்கம் : உம்மு அப்துர்-ரஹ்மான்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.