செவ்வாய்க் கோளில் தண்ணீர்?

செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய்க் கோளில் தண்ணீர் உள்ளதா என்றும் அங்கு மனிதர்கள் குடியேற முடியுமா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில்  US-ல் உள்ள நாசா அறிவியல் மையம் சமீபத்தில் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட படங்களை வைத்து அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 1997ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படங்களையும் தற்போது எடுக்கப்பட்ட படங்களையும் வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு பெருமளவில் இருப்பது தெரியவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க் கோளைப் படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வேயர் எனும் விண்கலன் அனுப்பிய சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட படங்களை ஆய்வு செய்த டாக்டர் கென்னத் எட்கட் என்ற விஞ்ஞானி இதைத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க் கோள் குறித்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வில் ஒரு முன்னேற்றமாக கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மனிதர்கள் அங்குக் குடியேற முடியுமா என்ற ஆய்வுகள் தொடர்ந்து முனைப்புடன் முன்னெடுத்துச் செல்லப்படலாம்.

அவ்வாறான ஆய்வுகள் சாதகமான முடிவுகளைத் தருமாயின், எந்த அளவுக்கு அது மனித இனத்திற்கு உகந்தது எனப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.