சிறப்பான குர்ஆன் மென்பொருள்!

Share this:

மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரமளான் மாதம் துவங்கி விட்டது. நன்மைகளை வாரிப் பெற்றுத் தரும் நல்ல அமல்களைச் செய்து கொள்ள நம்மில் அநேகம் பேர் இறங்கியிருப்போம்.

இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன்களில் குர்ஆன் மென்பொருளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. ஆயினும், சிறப்பான மென்பொருள் எதுவென தெரியாமல் பலர் அவதிப்படுவதைப் பார்க்க நேரிடுகிறது.

முக்கியமாக, Android ஃபோன் மற்றும் டேப்ளட் உபயோகிப்பவர்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இலவச APPS களில், அல் குர்ஆனுக்கு எந்த மென்பொருளை நிறுவுவது என்ற குழப்பமிருக்கும். ஏனெனில், ஒவ்வொரு ஆப்ஸும் வெவ்வேறு சிறப்பம்சங்களுடன் கிடைக்கின்றன.

https://lh3.ggpht.com/zoyAL6BWpiHrgyFEujQcEXhBqZn4SfX0JiIFqOecs2JoZYy39Yam8xiz7Vq6kP7S2w=w300கீழே காட்டியுள்ள சுட்டியில் க்ளிக்கி Quran Android ஐ நிறுவிக்கொள்வதன் மூலம் இந்தக் குழப்பம் ஓரளவு தீரும் என்று நினைக்கிறேன். ஏனெனில், இந்த Apps இல் ஒரே நேரத்தில் அரபி வசனங்களை பார்த்து ஓதவும், பல்வேறு காரீ-களின் அழகிய குரலில் கிராஅத் ஆகவும் கிடைப்பதோடு, தமிழ், ஆங்கிலம், உர்தூ, மலையாளம் மற்றும் பல்வேறு சர்வதேச மொழிகளிலும் தர்ஜுமா (மொழியாக்கம்) கிடைக்கிறது.

அது மட்டுமின்றி, கண்ணுக்கு இதமாக இருக்கும் வகையில் NIGHT MODE வசதியும் உள்ளது.  வசனங்களை புத்தகக்குறியீடு (Bookmark) செய்யவும், சமூகத் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் Copy/Paste செய்யவும் வசதியும் உள்ளன.

இவை ரமளானில் மிகவும் பயன் தரத்தக்க APPS என்றால் மிகையில்லை. இதைத் தயாரித்து இலவசமாக விநியோகம் செய்பவர்களுக்கு அல்லாஹ் எல்லா நலன்களையும் வழங்கட்டும்.

இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு கீழ்காணும் சுட்டியைக் கிளிக்கவும்:

https://play.google.com/store/apps/details?id=com.quran.labs.androidquran

 

இதைப் பயன் படுத்தியதோடு, உங்கள் நட்பு வட்டத்தில் அனைவருக்கும் பகிரவும். இதன் மூலம் நாம் அனைவருமே நன்மைப் பெற்றவர்களாவோம்.

N. ஜமாலுதீன்

 

 


 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.