செயல்படும் விதமும் நிபந்தனைகளும் (Terms & Conditions)

சத்தியமார்க்கம்.காம் இணையதளம் ஓர் இணைய மின் நூலகம் என்று கூறலாம். இஸ்லாத்தின் வாழ்வியல் நெறிகளை ஒரு போதனையாக மட்டுமே கொள்ளாமல், பல்சுவை அங்காடியாக, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும் சில இஸ்லாமிய சகோதர இணையதளங்களிலிருந்து சத்தியமார்க்கம் இன்ஷா அல்லாஹ் முற்றிலும் மாறுபட்டு விளங்கும் எண்ணத்துடன் சிலத் தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது.

சர்வதேச தரத்தில் இவ்விணையத் தளத்தை உலகத் தமிழ்  மக்களுக்கு வழங்கும் வண்ணம், ஒருங்குறி (Unicode) மற்றும் தானியங்கி எழுத்துரு (Dynamic Font) முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது எவ்விதமான உலகியல் இலாபங்களுக்காக நடத்தப்படவில்லை. எனவே கட்டுரைகளைச் சமர்ப்பிப்பவர்களுக்குப் பணமுடிப்போ வேறு ஏதும் சன்மானமோ வழங்கப்படுவதில்லை. படைப்பாளிகள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு படைப்புகளைச் சமர்ப்பிக்க ஆர்வமூட்டப்படுகிறார்கள்.

அ. இஸ்லாத்தை முன்னிறுத்திய சிந்தனை, இயக்கங்களையோ இஸங்களையோ பின் நிறுத்துதல் என்பன இத்தளத்தின் அடிப்படைக்கொள்கைகளாக இருக்கும்.

ஆ. ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் போது சொல்லப்படும் விஷயம் என்ன என்பதே முக்கியம். சொல்வது யார் என்பது அவசியமில்லை.

இ. ஒற்றுமை, சகோதரத்துவம், பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் என்பதில் உறுதியுடன் உள்ளோம். எந்நிலையிலும் சமுதாய முன்னேற்றம்/பாதுகாப்பு மட்டுமே கருத்தில் கொண்டு சமுதாய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தைக் குலைக்கும் விதமான செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஈ. தூய்மையான இக்லாஸ் உடன் எந்தச் சிக்கலையும் அணுக உள்ளோம்.

உ. தனிநபர் துதியோ/மிதியோ இல்லாத அலசல்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இஸ்லாம் கற்றுத்தந்த கண்ணியம் பேணப்படும். “துருவித் துருவி உங்கள் சகோதரனின் குறைகளை ஆராய வேண்டாம், ஒரு முஃமினின் மானம் இன்னொரு முஃமினுக்கு அமானிதம்” என்கிற இறை அறிவுறுத்தல்களுக்கேற்ப (சமுதாய முன்னேற்றத்திற்குப்) பிரச்னை தரும் இஸ்லாமியரின் (தனி மனிதரின்) பிண்ணணியைத் தோண்டாமல், தேவையில்லாத விஷயங்கள் என்று நிர்வாகிகளால் முடிவெடுக்கப்படும் விவாதங்கள் மேற்கொண்டு தொடராமல் நிறுத்தப்படும்.

ஊ. தவறை எவர் செய்திருந்தாலும் நடுநிலையோடு சுட்டிக்காட்டுவோம். சமூகத்திற்கு பலன் தரும் நன்மையை எவர் செய்திருந்தாலும் திறந்த மனதுடன் வரவேற்போம். சமுதாய முன்னேற்றத்திற்குச் சவாலாக விளங்கும் காரணிகளை எவ்வித பாரபட்சமுமின்றி எடுத்துரைப்போம்.

எ. அனாவசியமாகத் திசை திருப்பக்கூடியதாகவோ, அல்லது விதண்டாவாதம்/விஷமம் செய்யும் எண்ணத்தில் அமைந்த கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது. அவ்வாறு தோன்றும் கருத்துக்களையும், பின்னூட்டங்களையும் அகற்றும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு.

ஏ. சமுதாய ஒற்றுமை/முன்னேற்றம்/நிலைநிற்பு போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமுதாயத்திற்கு எதிராகப் பின்னப்படும் சதிவலைகளை ஆதாரத்துடன் தரும் ஆக்கங்கள் எவ்வித பயமும் இன்றி பிரசுரிக்கப்படும். சமுதாய முன்னேற்றம் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இத்தளம் செயல்படும். அதற்கு எதிரான ஒவ்வொரு செயல்பாடுகளும் தோலுரித்துக் காட்டப்படும்.