காப்புரிமையும் மறுப்பறிக்கையும் (Copyright & Disclaimer)

சத்தியமார்க்கம்.காம் இணையதளம் ஒரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமானதன்று. இது முழுக்க முழுக்க அர்ப்பணிப்பு மனப்பான்மையுள்ள தன்னார்வச் சகோதரர்களால் குழுவாக செயல்பட்டு வரும் ஒரு தூய இறைப்பணியாகும். எவ்வித உலக ஆதாயங்களுக்காகவும் இல்லாமல் முழுக்க இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்ற இறைவேட்கையின் அடிப்படையில் அமைந்த ஒரு வடிவமாகும்.

எந்த ஒரு இயக்கத்தினரையோ, பிரிவினரையோ, மட்டும் சார்ந்திராமல் தூய இஸ்லாத்தின் வாழ்வியல் நெறிகளை தமிழ் அறிந்த உலக மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் அரும்பணியை சத்தியமார்க்கம்.காம் செய்து வருகிறது.

சத்தியமார்க்கம்.காம் இணையதளத்தில் இடம்பெறும் ஆக்கங்கள் ஆசிரியர் குழுவின் முழுப்பரிசீலனை தேவைப்படின் மட்டுறுத்தலுக்கு உட்பட்டே பிரசுரிக்கப்படுகிறது. குறிப்பாக இஸ்லாமிய ஆய்வுக்கட்டுரைகள், எமது மார்க்க அறிஞர்களின் பார்வையில் குர்ஆன் மற்றும் நபிவழியுடன் சரிபார்க்கப் பட்டும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்பும் பிரசுரிக்கப்படும்.

இத்தளத்தில் எழுதப்பட்ட ஆக்கங்களுக்கு முழு பொறுப்பாளர், அந்த ஆக்கத்தினை எழுதியவரே ஆவார். எனினும், இத்தளத்தில் தாங்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமான கருத்துக்களோ, அல்லது பிழையான இறைவசன எண்களையோ அல்லது ஹதீஸ்களையோ காண நேரிட்டால் எங்களுக்குத் தகுந்த ஆதாரத்துடன் தெரிவியுங்கள். இத்தளத்தில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் குர்ஆன் மற்றும் சஹீஹ் ஹதீஸுக்கு எந்த வகையில் முரண்பட்டிருப்பதாகச் சுட்டப்பட்டால் அவை பாரபட்சமின்றி உடனடியாக சரி செய்யப்படும்.

இத்தளத்தில் உள்ள பொதுவான மற்றும் தமிழ் இஸ்லாமிய இணையதளங்களுக்கான சுட்டிகள் சேவை மனப்பான்மையில், நன்னம்பிக்கை (courtesy) அடிப்படையில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. இதில் உங்களுக்கு ஆட்சேபணை இருந்தாலோ, அல்லது சுட்டப்படும் இணைய தளங்களில் வேறு விரும்பத்தகாத பதிவுகள் இடம் பெற்றிருந்தாலோ, சத்தியமார்க்கம்.காம் பொறுப்பேற்காது.

இடம்பெறும் ஆக்கங்களில் சேர்க்கைகள், நீக்கங்கள் உள்பட திருத்தும் உரிமை இணையதளக் குழுவினருக்கு உண்டு.

சத்தியமார்க்கம்.காம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களையும் ஆக்கங்களையும் வரவேற்கிறோம். ஆக்கங்களை அனுப்ப விரும்பும் சகோதரர்கள் தள நிர்வாகியுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்களுக்குச் சொந்தமான இணையத்தளத்தில் அல்லது வலைப்பதிவில் தாங்கள் விரும்பும் பட்சத்தில் சத்தியமார்க்கத்தின் செய்தியோடையைத் (feed) தொடுப்பாகச் சேர்த்துக்கொள்ள இயலும்.

சகோதர இஸ்லாமிய தளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் எங்கள் அறிவுக்கு எட்டியவரையில் சரி பார்க்கப் பட்டு இங்கே இடப்படுகின்றன. இத்தகவல்களைத் திரட்டுவதில் அவர்கள் இட்ட உழைப்புக்கு நாம் நன்றி சொல்கிறோம். ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் வாழ்க்கை நெறியாக வழங்கப்பட்ட இஸ்லாம் மற்றும் அதன் அடிப்படைக் கொள்கைகளுக்கு எவரும் தனிப்பட்ட சொந்தம் கொண்டாட இயலாது. எனவே எங்கள் தளத்தில் இஸ்லாம் தொடர்பான தகவல்களை எவரும் அழைப்புப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறியத் தருகிறோம். (பதிவுகளின் அடிக்குறிப்பாக, எங்களின் தளப் பெயரையும் நன்னம்பிக்கை அடிப்படையில் இணைக்கக் கோருகிறோம்) நன்றி!