மரியாதைக்குரிய வாக்காளப் பெருமக்களே!

Share this:

னிப்பு” என்றெழுதி

இளித்து நக்கும் மக்களே! – இல்லாததை

‘இருக்கு’ என்றியம்பும்

இம்சை அரசர்கள் பராக்!

 

வாக்குறுதி வசதிகள்

வாழ்க்கைக்கு உதவுமா? – அன்றியும்

வாய்ப்பந்தல் பற்றிக்கொண்டு

வளர்ச்சிக்கொடி படருமா?

 

தேர்தல் அறிக்கையென்ன

அலாவுதீன் கைவிளக்கா?

தேய்த்ததும் தேவைகள் தீர்க்க

அது பட்டணத்தில் பூதமா?

 

அரசியல்வாதி அறிக்கை

அமுத சுரபியல்ல! – தேர்தல்

மணிமேகலை கதையல்ல

உணவு ஊறிவர!

 

வாக்குச்சீட்டு ஓர்

அலிபாபா கடவுச்சொல்! – கவனம்,

பொக்கிஷம் பறிபோகும்

பொல்லாதோர் பறித்துக்கொண்டால்

 

கூட்டணிகள் கண்டீரே

கொள்கைகளைக் கண்டீரா? – வாக்குச்

சீட்டுக்கு வலைவிரிக்கும்

வேடர்களை வெல்வீரா?

 

வெற்றியெனும் போதைக்கு

வேட்டிக்கரை மாறும் – இந்த

வீணர்கள் சேவையெல்லாம்

வெறும்பேச்சு, வினையல்ல

 

வாக்காளப் பெருமக்கள்

விற்பனைக்கு இல்லை – முழங்கு

“ஓட்டு, பணத்துக்கல்ல!”

ஓட, ஓட, விரட்டிவிடு!

 

காசுக்கு விலைபோய்

கட்சிகளிடம் கற்பிழக்காதே! – கவரும்

மேடைப்பேச்சில் மதிமயங்கி

மேலும் சுயமிழக்காதே!

 

ஒரு வாக்குதானே எனும்

உதாசீனம் வேண்டாம் – உன்

வாக்குச்சீட்டு ஒன்றுதான்

வெற்றியை நிர்ணயிக்கும்!

 

– சபீர்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.