புஷிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

{mosimage}வாஷிங்டன்: சட்ட விரோதமாக அமெரிக்காவினுள் நுழைந்த கத்தரை சேர்ந்த அலி ஸாலிஹ் கஹ்லாஹ் அல்மாரியை நீண்ட காலத்திற்கு குற்றம் சுமத்தாமல் சிறையில் அடைக்க புஷின் அரசுக்கு அதிகாரம் இல்லை என அமெரிக்க முறையீடு நீதிமன்றம் புஷிற்கு எதிராக தீர்ப்பளித்தது. அல்காயிதா போராளி என்று கூறி 2003 முதல் அல்மாரியை அமெரிக்கா சிறையில் அடைத்துள்ளது.

அல்மாரியை அவரின் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பவோ அல்லது அவரை சிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்படவோ வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று பேர் அடங்கிய நீதிபதி குழுவில் இரு நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பு கூறினர்.

இத்தீர்ப்பு, குற்றம் சுமத்தாமல் தீவிரவாதிகள் எனக் கூறி முஸ்லிம்களை நீண்டநாட்களாக சிறையில் இட்டு வதைக்கும் புஷின் அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய தாக்கீதாக கருதப்படுகிறது. "தீர்ப்பு எதிர்பாராதது என்றும் நிராசை ஏற்படுத்தக்கூடியது என்றும் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 13 அங்கங்கள் அடங்கிய நீதிமன்ற குழுவில் தீர்ப்பை புனர் பரிசோதனை செய்ய மேல் முறையீடு செய்யப்படும் எனவும் அமெரிக்க ஜஸ்டிஸ் டிபார்ட்மெண்ட் கருத்து தெரிவித்தது.

அல்மாரி ஆப்கானிஸ்தானில் அல்காயிதா குழுவால் ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டவர் எனவும், அமெரிக்க பொருளாதாரத்தில் மோசமான குழப்பங்கள் ஏற்படுத்துவதற்காக பயிற்சி பெற்று நாட்டில் நுழைந்துள்ளார் என்றும் ஜஸ்டிஸ் டிப்பார்ட்மெண்ட் கூறுகிறது. ஆனால், 2001 செப்டம்பர் 10 ஆம் தேதி மனைவி மற்றும் தனது 5 குழந்தைகளுடன் மாணவர்களுக்கான விஸாவில் அல்மாரி அமெரிக்கா வந்தார். க்ரெடிட் கார்டில் திருட்டுத்தனம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அல்மாரியை பின்னர் "எதிரிப் போராளி" என்ற பட்டம் கொடுத்து எவ்வித விசாரணையும் இன்றி தெற்கு கரோனாவிலுள்ள இராணுவச் சிறையில் புஷ் அரசு அடைத்தது.