அமெரிக்கப் பொருளாதாரத்தை அதிரவைக்கும் இராக் போர் செலவினங்கள்

{mosimage}நியூயார்க்: இராக் போரின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடும் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அது பொருளாதார மீட்பிற்கு இடையூறாக உள்ளது எனவும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோஸெஃப் ஸ்டிக்லிட்ஜ் கூறுகிறார்.

 

இதற்கிடையே US அரசாங்கம் போர்ச்செலவீனங்களை மிகவும் குறைவானதாகக் தப்புக்கணக்குக் காட்டி வருகிறது என்று ஸ்டிக்லிட்ஜும் துணை ஆசிரியர் லின்டா பில்மெஸும் அவர்களது புத்தகமாகிய The Trillion Dollar War என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

சுமார் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் இந்த போர், ஆரம்பத்தில் இராக்கின் எண்ணெய் ஏற்றுமதிகள் மூலமே மேலதிகச் செலவுகளின்றி சரியாகிவிடும் என்ற நிலை தற்போது அமெரிக்க நிதிக்கருவூலத்திற்கு நேரடியாக 845 பில்லியன் டாலர் செலவீனமாகியுள்ளது.

 

ஒரு காலத்தில் போர்கள் பொருளாதாரத்திற்கு நல்லது என்று கருதப்பட்டது. எந்த ஒரு பொருளாதார நிபுணரும் தற்போது இந்த கருத்தை சரிகாணுவதோ நம்புவதோ இல்லை, என்று ஸ்டில்கிலிட்ஜ் ஒரு நேர்காணலில் கூறினார்.

 

ஸ்டிக்லிட்ஜும் பில்மெஸும் தமது மிகவும் நடுநிலையான கணிப்பின் அடிப்படையில் இதன் செலவீனங்கள் குறைந்தது 3 டிரில்லியன் டாலர் வரையாகியிருக்கும் என்று வாதிடுகின்றனர். மேலும் இதன் செலவீனங்கள் பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டால் இரண்டாவது உலகப் போருக்கான செலவையும் தாண்டி 5 டிரில்லியன் ஆகும் என்று குறிப்பிடுகின்றனர்.

 

இதில் நேரடிச் செலவுகளில் போருக்காகப் பெறப்பட்ட கடன் மீதான வட்டி, போரிலிருந்து தாயகம் திரும்பி வருபவர்கள் உடல் நலம் மற்றும் மருத்துவ செலவுகள், போரில் உபயோகித்துப் பாழாகி தரம் குறைந்த இயந்திரங்கள் பழுது பார்த்தல், அல்லது மாற்றிட ஆகும் செலவுகள் ஆகியன சேர்க்கப்படவில்லை என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அதோடு, வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படாத எண்ணெய் விலையேற்றம் தொடர்பான சமூகப் பொருளாதாரச் சார்புடைய இதர செலவீனங்களையும் புத்தகம் விவரிக்கின்றது. இந்த பணத்தை இதர பயனுள்ள செலவுகளில் எப்படி ஈடுபடுத்தியிருக்க இயலும் என்பதை விவரிக்க பில்மெஸ் அவர்கள், அமெரிக்காவின் மதியிறுக்க (Autism) ஆராய்ச்சிக்கு வருடத்தில் 108 மில்லியன் டாலர் செலவிட ஒதுக்கீடு செய்யப்படுள்ளதை மேற்கோள் காட்டி, இதே தொகை ஒவ்வொரு நான்கு மணி நேரத்தில் ஈராக்கில் செலவிடப்படுகிறது என்று கூறினார்.

 

ஒரு டிரில்லியன் டாலர் இருந்தால் 15 மில்லியன் பள்ளி ஆசிரியர்களை ஓராண்டிற்குப் பணியில் அமர்த்தியிருக்கலாம், அல்லது 43 மில்லியன் மாணவர்களுக்கு 4 ஆண்டுகள் இலவச உயர்நிலைக் கல்லூரியில் கல்வி பயில வைத்திருக்கலாம் என்றும் அந்தப் புத்தகம் கூறுகிறது.

 

ஸ்டிக்லிஸ்ட்ஜும் பில்மெஸும் தாங்கள் தங்கள் போர் எதிர்ப்புச் சார்பான கருத்துக்களுக்கு ஈடாக்க, இந்த கணக்கீட்டில் மிகவும் நடுநிலையான போக்கையே மேற்கொண்டுள்ளதாக இந்நூலில் கூறுகின்றனர்.

 

இராக் மீதானப் போரின் விளைவாகவே அமெரிக்காவின் நிதி நிலையில் தற்போது மாபெரும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக நிச்சயமாகத் தாம் கருதுவதாக ஸ்டிக்லிட்ஜ் கூறினார்.

அமெரிக்க நிதி நிறுவனங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அவர்கள் மத்திய கிழக்கின் ஆட்சியாளர்களின் நிதிகளின் பக்கம் தமது மீள் வரவுக்கும் பொருளாதார மீட்சி வழிவகைகளுக்கும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அவர் கூறினார். நூலாசிரியர்கள் இது போன்ற மேலும் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை இந்நூலில் வெளியிட்டுள்ளனர்.