உம்ரா மற்றும் ஹஜ் விசா மின்னணுவாக்கம் – சவூதி அரசாங்கம் அறிவிப்பு

Share this:

இந்த வருடத்திலிருந்து உம்ரா மற்றும் ஹஜ் விசாக்களை மின்னனுவாக்கம் (e-visa service) செய்ய இருப்பதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் உம்ரா மற்றும் ஹஜ் புனித யாத்திரைகளுக்காக பல நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் சவூதிக்கு வருகை தருகிறார்கள். புனித யாத்திரை மேற்கொள்ளவிருக்கும் மற்றும் புனித யாத்திரையிலிருக்கும் பயணிகளின் பாதுகாப்பு, தனியார் பயண நிறுவனங்களின் சேவைத்தர மேம்பாடு,  புனித யாத்திரைக்கு வரும் பயணிகள் ஏமாற்றப் படுவதை தவிர்த்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வசதியினை சவுதி அரசு அறிமுகப் படுத்த திட்டமிட்டிருக்கிறது.

ஜித்தா வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த அலி ஹசன் அல் நாஹீர் (ِAli Hassan Al Nagur – Head of the transport Committee – Jeddah Chamber of Commerce and Industry) அவர்கள் குறிப்பிடுகையில், இந்த  மின்னனு சேவை மூலமாக சவுதி அரேபியாவில், விசா தொடர்பாக ஏற்படும் சில பிரச்னைகளை விரைவில் தீர்க்க முடியும் என்றும், உம்ரா மற்றும் ஹஜ்ஜிற்கு வரும் பயணிகளில் சிலர் தங்களின் விசா கால அவகாசம் முடிந்தும் சவுதியை விட்டு வெளியேறாமல் சட்டத்தை மீறி பணி புரிவதை தடுக்கவும் முடியும் என்று தெரிவித்தார்.  உம்ரா, ஹஜ் விசாக்கள் மட்டுமல்லாது வேலைவாய்ப்பு விசாக்களும் (Emlopyment Visa) மின்னனுவாக்கம் செய்யப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்

தற்போது சவூதி அரேபியாவின் மக்கள் தொகை 27.6 மில்லியனாகும். இங்கு வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனாகும்.  விசா காலம் முடிந்தும் தத்தம் நாட்டிற்குத் திரும்பாமல் சவுதியிலேயே தொடர்ந்து பணி புரிந்து வரும் பணியாளர்களை கண்டுபிடித்து அவர்களை, அவரவர்களின் நாட்டிற்கு திரும்ப அனுப்பக்கூடிய பணிகளை சவுதி அரசு திறம்பட செய்து வருகிறது. இப்பணிகளை செய்வற்கு வருடம் ஒன்றிற்கு சுமார் 420 மில்லியன் சவுதி ரியால் செலவிடப்படுகிறது. அத்துடன் உம்ரா யாத்திரைக்கு வரும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காக ஒவ்வொரு வருடமும் 60 மில்லியன் சவுதி ரியாலும், ஹஜ் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காக ஒவ்வொரு வருடமும் 60 மில்லியன் சவுதி ரியாலும் அரசாங்கம் செலவிடுகிறது.

அத்துடன், விசா கொடுக்கப் பட்ட நிறுவனங்களை விடுத்து (Original Sponser) வேறு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களை கண்காணித்து அவர்களை தாயக நாட்டிற்கு திரும்ப அனுப்புவதற்காக சுமார் 300 மில்லியன் ரியால்களையும் சவுதி அரசு செலவிடுகிறது.

மின்னனுவாக்கம் (e-visa service)  சேவையினை, சவூதி  அரசாங்கம் திட்டமிட்டு திறம் பட செய்யும் பட்சத்தில், போலி விசாக்களை உருவாக்கி அதன் மூலம் அப்பாவிகளை ஏமாற்றி கள்ளத் தனமாக சம்பாதிக்கும் போலி ஏஜண்டுளை கண்டுபிடித்து தண்டிப்பதும் எளிதாகி விடும்.

தகவல் – முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.