கத்தரில் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்குகள்!

கத்தர் தமிழர் சங்கம் (Qatar Tamizhar Sangam) மற்றும் தமிழ் ஊடகப் பேரவையினர் (Tamil Media Forum) இணைந்து, பிரபல ஊடகவியலாளரும் சன் டிவி “நேருக்கு நேர்” நிகழ்ச்சி தொகுப்பாளருமான திரு. வீரபாண்டியன் தலைமையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

வரும் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குக் கத்தர் தமிழர் சங்கம் வளாகத்தில் உள்ள அரங்கில், “சமூகச் சீரழிவுகளும் இளைய தலைமுறையும்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு KMCC அரங்கில், “இன்றைய ஊடகங்களும் மாற்று ஊடகத்தின் அவசியமும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பெண்களுக்குத் தனி இடவசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் தமிழர்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தருமாறு கத்தர் தமிழர் சங்கம் மற்றும் கத்தர் தமிழ் ஊடகப் பேரவை அன்புடன் அழைத்துள்ளனர்.

இரு நிகழ்ச்சிகளுக்குமான அழைப்பிதழ்கள் மற்றும் அரங்க அமைவிடத்தின் வரைபடங்கள் கீழே இணைக்கப் பட்டுள்ளன.

நிகழ்ச்சிகள் தொடர்பான மேலும் விபரங்களுக்குத் தொடர்புகொள்ள:

கைப்பேசி: 30107474

மின்னஞ்சல்: TamilMediaForum@gmail.com