போஸ்னிய முஸ்லிம்கள் மீது அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டு அவர்களைக் கூட்டம் கூட்டமாக் கொன்று குவித்ததால் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுத் தேடப்பட்டு வந்த ராதோவன் கரட்சிக் சென்ற திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளான்.
பிரிட்டனின் உளவுத்துறையான MI6 இவனைத் தேடும் பணிகளைப் பலகாலமாக முடுக்கி விட்டிருந்தது. இதற்கு முன்பெல்லாம் அவன் சுற்றி வளைக்கப் படும்போது அவன் தப்பிவிட்டான். தற்போது யூகோஸ்லேவிய அரசின் ஒத்துழைப்போடு கரட்சிக் சிக்கிக் கொண்டான்.
1992-1995 காலகட்டத்தில் செர்பியர்களுக்கு வெறுப்பூட்டி போஸ்னிய முஸ்லிம்களைக் கொன்றொழிக்கக் கரட்சிக் முக்கிய சூத்திரதாரியாக இருந்துள்ளான்.
முகம் முழுவதும் நீண்ட தாடி, மீசை வளர்த்தும், மூக்குக் கண்ணாடி அணிந்தும் பொதுமக்களில் ஒருவனாகவே ஊடுருவி ஒன்றிப் போயிருந்த கரட்சிக்கைக் கண்டுபிடித்துக் கைது செய்தது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை.
திரகன் டாபிச் என்ற பொய்யான பெயரைப் புனைந்து கொண்ட கரட்சிக், தன்னை ஆன்மீக குரு என அறிமுகப் படுத்திக் கொண்டு புனித வேடம் தரித்து கடந்த பதின்மூன்று ஆண்டுகாலம் மறைந்திருந்தான். அதோடு இயற்கை வைத்தியம் செய்வதாகவும் தன்னைக் காட்டிக் கொண்டான்.
1992-1995 கால கட்டத்தில் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பட்ட தனது உறவுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் போஸ்னிய முஸ்லிம்கள், கரட்சிக் பிடிபட்டது குறித்து எச்சரிக்கை உணர்வுடன் கூடிய மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்திய கரட்சிக்கான மோடி இது போல் நீதியின் பிடியில் சிக்கும் நாள் வருமா?