ஈராக்கில் பிரிட்டிஷ் படையினரின் ஒழுங்கீனம்

Share this:

ஈராக்கில் சதாம் ஹுஸைன், பேரழிவை தரக்கூடிய ஆயுதங்களை வைத்திருக்கிறார். அதனால் உலக மக்களையும் ஈராக் மக்களையும் நாங்கள் காப்பாற்றப் போகிறோம் என்று தறுதலையாட்டம் ஆடிய புஷ், ஐ.நா.வின் அனுமதியின்றி அத்துமீறி ஈராக்கில் நுழைந்து ஆக்கிரமிப்பு வேலையை செய்தார்.

 

 

அங்கே பேரழிவை ஏற்படுத்தக் கூடிய குண்டூசியைக் கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. லட்சக்கணக்கான ஈராக்கிய மக்களையும் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களையும் இழந்ததுதான் மிச்சம்.

பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை அமெரிக்கா மறைத்து வைத்துள்ளது என்று கூறி சீனாவும் இந்தியாவும் அமெரிக்காவை ஆக்கிரமிப்பு செய்தால் அமெரிக்காவின் நிலை என்னவாக இருக்கும்? ஏன் ஆக்கிரமிப்பு செய்தீர்கள் என்று அமெரிக்காவால் கேட்க முடியாது. எனென்றால் அமெரிக்கா அந்த வேலையைத்தான் ஈராக்கில் செய்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா ஒரு வல்லரசு அவர்களை ஆக்கிரமிப்பு செய்வதா? செய்ய முடியுமா? என்றா கேட்கிறீர்கள். ஈ, காக்கை கூட அமெரிக்காவுக்குள் நுழைவதாக இருந்தால் அமெரிக்காவின் அரசாங்கத்திடம் விசா வாங்கித்தான் நுழைய முடியும் என்று கற்பனை சித்திரத்தை வரைந்து வைத்திருந்த அமெரிக்காவுக்கு விழுந்தது பலத்த அடி 2001 ல் இரட்டை கோபுர விமான தாக்குதல். அமெரிக்காவை திடீர் தாக்குதல் நடத்தினால் கோழிக்குஞ்சு போல் குண்ணிப் போய் விடும்.

உலகின் இரண்டாம் எண்ணெய் உற்பத்தி நாடாகிய ஈராக்கை ஆக்கிரமிப்பு செய்து, எண்ணெய் வளத்தை சுரண்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க நாட்டு மக்களின் நலனில் கூட அக்கரை காட்டாமல், ஏராளமான வேலையற்றவர்கள் அமெரிக்காவில் பெருக விட்டுக் கொண்டு, மற்றவர்களின் சொத்துக்களின் மீதும் மற்றவர்களின் அதிகாரத்தின் மீதும் அளவில்லா ஆசை கொண்டு பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது இந்த அமெரிக்கா.

இந்த அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு முடிவு கட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதோடு முடித்துக் கொண்டு விஷயத்துக்கு வருவோம்.

விசாரணைக் கைதிகள் என்ற பெயரில் கொன்டனாமோ சிறையில் முஸ்லிம்களை பல வருடங்களாக அடைத்து வைத்து எந்த வித விசாரணையும் இதுவரையின்றி முஸ்லிம்களை அவமதிக்கும் அமெரிக்கா சர்வ தேச மனித உரிமை அமைப்புகளால் கடும் கண்டனத்துக்கு இலக்காகி இருக்கிறது.

அபூகாரிப் சிறையில் அமெரிக்க பிரிட்டானிய படைகள் முஸ்லிம் சிறைவாசிகளை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதை உலக மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் அல்லாஹ் வெளிக் கொண்டுவந்தான். ஆடு மாடுகளை விட கேவலமாக முஸ்லிம் சிறைவாசிகளை நிர்வாணமாக்கி கண்களை கறுப்புத் துணிகளால் கட்டி விட்டு பாலுணர்வை தூண்டி விட்டு விளையாடிய விஷயங்கள் அம்பலத்துக்கு வந்தன. இப்படிப்பட்ட கழிசடைகள் தான் ஈராக் மக்களையும் உலக மக்களையும் காப்பாற்றப் போகின்றனவாம். அந்தோ பரிதாபம்.

ஐரோப்பிய படையினர் ஒரு ஈராக்கியரை அநியாயமாக கொன்றதற்காக வழக்கு தொடுக்கப்பட்டு அந்த ஈராக்கியரின் தந்தைக்கு பல மில்லியன் பவுன்டுகள் தண்டத்தொகை வழங்குமாறு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாஷா மூஸா என்ற 26 வது ஹோட்டல் ரிசப்ஸனிஸ்ட், பிரிட்டிஷரின் கட்டுப்பாட்டில் இருந்த போது 2003 செப்டம்பரில் பிரிட்டிஷ் படையினர் அடித்தே கொன்று விட்டனர். பாஷா மூஸாவின் தந்தைக்கு 3 மில்லியன் பவுன்டுகள் தண்டத் தொகையாக கொடுப்பதாக ஒத்துக் கொ    ள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது மேலும் 9 ஈராக்கியர்கள் பிரிட்டிஷரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கைதியாக பிடிக்கப்பட்ட 14 வயது ஹஸன் என்ற ஈராக் சிறுவனை சிறையில் அடைத்து வைத்து, அவனோடு சிறையில் இருந்த மற்றொரு கைதியை கொண்டு வலுக்கட்டாயமாக பாலுணர்வு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் பிரிட்டிஷ் கோர்ட்டுக்கு சென்றுள்ளது.

பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் இந்த விவகாரத்தை ராயல் மிலிட்டரி போலீஸ் துப்புத் துலக்கிக் கொண்டிருப்பதாக உறுதி செய்துள்ளது. இந்த விஷயம், உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் பிரிட்டானிய படையினரின் ஒழுக்கமற்ற செயல் மத்திய கிழக்கு நாடுகளில் பிரிட்டிஷ்காரர்களின் பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும்.

இதுமட்டுமல்லாமல், மாஸின் யூசுப் என்ற ஈராக் லீக்கைச் சேர்ந்தவர் ஈராக்கில் உள்ள பஸ்ரா என்ற இடத்தில் முலைமுடுக்கெல்லாம் சென்று, பிரிட்டானியப் படையினரின் இது போன்ற 80 ஒழுக்கமற்ற செயல்களின் கேஸ்களை தகுந்த ஆதாரங்களோடு திரட்டி வைத்திருப்பதாக கூறுகிறார்.

என்ன நடக்கிறது உலகத்தில் – அநியாயக்காரர்கள் உலகத்தில் நீதியை நிலை நாட்டப் போகிறார்களா? ஒழுக்கமற்றவர்கள் உலகத்தில் ஒழுக்கத்தை போதிக்கப் போகிறார்களா? வியப்பாக இருக்கிறதே.

நன்றி – இஸ்லாமிய தாஃவா.காம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.