அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
தமிழக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தை முன்வைத்து “பிறப்புரிமை” மற்றும் அப்பாவி முஸ்லிம்களின் விடுதலையை மையமாகக் கொண்டு “கைதியின் கதை” ஆகிய குறும் படங்களை இயக்கிய ஊடகவியலாளரும் சிறந்த சமூகச் சிந்தனையாளருமான ஆளூர் ஷாநவாஸின் கத்தர் வருகையினை முன்னிட்டு கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அரசியல், சமூக முன்னேற்றத்தின் பால் ஆர்வம் கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவரும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.
* இன்ஷா அல்லாஹ் 21.11.2013 வியாழன் மாலை 7 மணி முதல் 9 மணி வரை “முஸ்லிம்களும் ஊடகங்களும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அல் ஸத்தில் (Al Sadd) உள்ள என்டெலிஸ்ட் (Entelyst) அலுவலகத்தில் நடை பெற உள்ளது. இதில் கலந்து கொள்ள முன் பதிவு செய்த நாற்பது நபர்கள் மட்டும் அனுமதிக்கப் படுவர்.
* இன்ஷா அல்லாஹ் 22.11.2013 வெள்ளியன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை “முஸ்லிம்களின் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்” எனும் தலைப்பில் உரை மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்த 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
* 23.11.2013 சனியன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை “ஊடக பயிலரங்கம்(Media Workshop)” நடைபெறும். ஊடகப் பயிலரங்கில் முன் பதிவு செய்த 25 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.
மேலதிக விபரங்கள் அறியவும் நிகழ்ச்சிகளில் இருக்கை முன்பதிவு செய்யவும் கீழ்கண்ட மின்னஞ்சல் அல்லது தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் :
For Free Registrations Contact : 55465678 / 55515648 / 33051519/ 55519639
Send Mail to: events@satyamargam.com / admin@satyamargam.com
(வேண்டுகோள்: இச் செய்தியை வாசிக்கும் நீங்கள், கத்தரில் வசிக்கும் உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இதனை அனுப்பி பயன்பெற உதவுங்கள். நன்றி)