பின்லாடனுக்கு ஸைஃபுல்லாஹ் – அல்லாஹ்வின் வாள் – பட்டம்!

தெஹ்ரான்: இறைத் தூதர் நபி(ஸல்) அவர்களையும் திருக் குர்ஆனையும் மோசமாக சித்தரித்து எழுதிய சல்மான் ருஷ்டிக்கு, பிரித்தானியா சர் பதவி வழங்கியதற்கு எதிராக உலகம் முழுவதும் கடுமையான விமர்சனமும் எதிர்ப்பும் வலுத்து வருகின்றது.

கடந்த இரு தினங்களுக்கு முன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறைஅமைச்சகம் தனது நாட்டில் உள்ள ஈரானின் ஹைகமிஷனர் இராபர்ட் பிரின்க்லியை  நேரில் அமைச்சகத்திற்கு அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது. இதே தினம் பாகிஸ்தான் பாராளுமன்றத்திலும் பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில எம்பிக்கள் பிரித்தானியாவுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.பாகிஸ்தான் இஸ்லாமிய துறையின் அமைச்சர் முஹம்மது உஜாஸுல் ஹக் ஒரு படி மேலே சென்று, "தூதரின் மகத்துவத்துவத்திற்காக யாராவது தனது உயிரை தியாகம் செய்து தாக்குதல் தொடுத்தால் அது கூட தவறாகாது" என முழங்கினார்.

நேற்றைய முந்தைய தினம் இரானும் இதே ரீதியில் தனது நாட்டில் உள்ள பிரித்தானிய ஹைகமிஷனர் ஜெப்ரி ஆடம்ஸை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. மலேசியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பிரித்தானியாவின் இச்செயல்பாட்டிற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

"பிரித்தானிய அரசிடமிருந்து நிகழ்ந்த தவறானதும், அவமானகரமானசம்பவம் இது. இஸ்லாத்திற்கு எதிராக நடத்தும் யுத்தத்தின் மற்றொரு உதாரணம் தான் தற்போது ருஷ்டிக்கு வழங்கப்பட்டுள்ள இப்பதவி" என இரான் வெளியுறவுத்துறையின் ஐரோப்பிய பொறுப்பாளர் இப்ராகிம் ரஹிம்பூர் கூறினார். "பிரித்தானிய அரசும், எலிசபெத் ராணியும் தான் இச்சம்பவத்திற்கு பொறுப்பாளர்கள் ஆவர்" என்றும் அவர் கூறினார்.

பிரித்தானியாவின் இச்செயல்பாட்டிற்கு எதிராக மலேசிய இஸ்லாமியகழகத்தினர் கோலாலம்பூரில் பிரித்தானிய எம்பஸியின் முன்பு கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். "ஸல்மான் ருஷ்டி நாசமாகட்டும்; பிரித்தானியா நாசமாகட்டும்" போன்ற கோஷங்களை எழுப்பியபடி மக்கள் பெருவாரியாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். "ருஷ்டிக்கு சர் பதவி வழங்கியது, அப்பதவிக்கே அவமானமாகும்" என அக்கட்சியின் பொருளாளர் ஹத்தரம்லி கூறினார்.

"இஸ்லாத்திற்கெதிரான நிராகரிப்பாளர்களின் மற்றொரு கையேற்றமேருஷ்டிக்கு தற்போது பிரித்தானியா வழங்கிய வெகுமதி" என ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைவர் கூறினார். சம்பவத்திற்கு எதிராக பாகிஸ்தானிலும் மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

பாகிஸ்தானின் "இஸ்லாமாபாத் தொழிலதிபர்கள் சங்கத்தின்" பொதுச் செயலாளர் அஜ்மல் பலூச்சி, "ருஷ்தியின் தலையை எடுப்பவர்களுக்கு 10 மில்லியன் ரூபாய் பரிசளிக்கப்படும்" என அறிவித்தார். அவர் மேலும், "ருஷ்திக்கு சர் பதவி வழங்கி சிறப்பித்திருக்கும் பிரித்தானியாவின் பொருட்களை புறக்கணிக்க இஸ்லாமிய நாடுகள் முன் வரவேண்டும்" என்றும் கூறினார். 

ஜம்மு காஷ்மீரில் நடந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர். ஜம்மியத்துல் முஜாஹிதீன் என்ற அமைப்பு விடுத்த பந்தை தொடர்ந்து நாடு முழுவதும் கடைகள் மற்றும் அனைத்து வியாபார நிறுவனங்கள் திறக்கவில்லை. நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றது.

உலகம் முழுக்க பிரித்தானியாவின் இச்செயல்பாடு முஸ்லிம்களுக்கிடையில் மிகுந்த எதிர்ப்பை தோற்றுவித்த போதிலும் பிரித்தானியா தனது செயலை நியாயப்படுத்தும் வகையில், "ருஷ்திக்கு வழங்கப்பட்ட சர் பதவி அவரின் இலக்கிய சேவைக்கே" எனக் கூறியது.

பிரித்தானியாவின் இவ்வறிவிப்பு வெளியான சில மணித்துளிகளில்பாகிஸ்தானின் உலமாக்கள் சபை அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் உசாமா பின் லாடனுக்கு "ஸைஃபுல்லாஹ்"(அல்லாஹ்வின்வாள்) என்ற பட்டத்தை வழங்கி கௌரவிப்பதாக அறிவித்தது.

"இஸ்லாத்தின் மீது அவதூறை வாரி வீசி உலக முஸ்லிம்களின் மனதை ரணப்படுத்திய சல்மான் ருஷ்திக்கு சர் பதவி வழங்கலாம் எனில், அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா முதலிய நாடுகளின் இஸ்லாத்திற்கெதிரான செயல்பாடுகளுக்கு எதிராக இஸ்லாத்திற்காகபோராடும் உசாமா பின் லாடனுக்கு 'அல்லாஹ்வின் வாள்' என்ற அர்த்தம் வரும் 'ஸைஃபுல்லாஹ்' என்ற பட்டம் நிச்சயம் பொருத்தமானதே என பாகிஸ்தான் உலமாக்கள் சபை சேர்மன் தாஹிர் அஷ்ரஃப் ராயிட்டர்ஸுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

"இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் எதிராக வேண்டுமென்றே பொய்களை புனைந்து பிதற்றிய சல்மான் ருஷ்டிக்கு வெகுமதி வழங்கி சிறப்பித்ததன் மூலம், இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் தாங்கள் எப்பொழுதுமே எதிர் தான் என தெளிவாக உலகுக்கு அறிவித்திருக்கும் பிரித்தானிய அரசின் இந்த அவமானகரமான ஈனச்செயலை இத்தருணத்தில் சத்தியமார்க்கம் தள குழுவும் வன்மையாககண்டிக்கின்றது".

மத மற்றும் பொது செயல்பாடுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கும்பிரித்தானிய அரசு, இஸ்லாமிய சமூகத்திற்கு எரிச்சலும் பிரித்தானிய அரசின் மீது வெறுப்பும் தோற்றுவிக்கும் இச்செயல்பாட்டை உடனடியாக திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்து தனது நடுநிலைமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் சத்தியமார்க்கம் தள குழு எதிர்பார்க்கின்றது.