அஸ்ஸலாமு அலைக்கும்.
அமெரிக்காவில் வாழும் தமிழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சீரிய முயற்சியை, அங்குள்ள டெக்ஸஸ் மாநில முஸ்லிம்கள் முன்னெடுத்துள்ளனர், அல்ஹம்து லில்லாஹ்!
அவர்களின் இரண்டாவது அமர்வு, கடந்த 25.5.2014இல் டல்லஸ் நகருக்கு அண்மையிலுள்ள ப்லேனொவில் நடந்து முடிந்தது. அமர்வில் எடுக்கப்பட்ட படங்களுள் சில கீழே உள்ளன.
ஆக்கபூர்வமான இம்முயற்சியில் இறங்கியுள்ள அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறது.
தகவல் : ஷேக் தாவூத், டல்லாஸ்
sdawoood@yahoo.com
http://www.americantamilmuslims.org