பாகிஸ்தானின் பயங்கரவாத குழுக்களின் ஊழியர் “விக்ராந்த் காஷ்யப்” உத்தரகாண்ட்டில் கைது!

Share this:

உத்தரகாண்ட் (11 ஏப்ரல் 2026): பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்ராந்த் காஷ்யப் (29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநில சிறப்புப் பணிப் படை (STF) மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய ‘ஆபரேஷன் பிரஹார்’ (Operation Prahar) என்ற திட்டத்தின் கீழ், டேராடூனில் இவர் கைது செய்யப்பட்டார்.  விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துவிட்டு பழியை இந்திய முஸ்லிம்கள் மீது சுமத்துவது, மதக்கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (Click here)

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட் போன்ற எல்லை மாநிலங்களில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் தூண்டுவது, போதைப்பொருளை எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியாவுக்கு கடத்துவது போன்ற செயல்களில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும், அவர்கள் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் இணையவழியாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் இந்தியாவில் உள்ள இளைஞர்களிடையே பயங்கரவாத பிரசாரத்தையும், தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். எனவே, இணையவழியாகவும் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான கண்காணிப்பை இந்திய உளவு அமைப்புகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில், உத்தரகாண்ட் – டேராடூனில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு தொடர்புடைய ‘தெஹ்ரீக்-இ-தாலிபான் ஹிந்துஸ்தான்’ என்ற பயங்கரவாத குழுவுக்கு உளவு பார்த்த விக்ராந்த் காஷ்யப் (29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் தரப்பிலிருந்து விக்ராந்த் காஷ்யப்பிற்கு பின்வரும் பொறுப்புகள் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது:

1. டேராடூனின் முக்கியக் கட்டிடங்களின் சுவர்களில் ‘TTH’ என்ற வார்த்தையை ஸ்ப்ரே பெயிண்ட் மூலம் எழுதி அச்சத்தை ஏற்படுத்துவது. மதநல்லிணக்கத்தைக் குலைப்பது.

2. டெல்லியில் உள்ள சில வலதுசாரி அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது கைக்குண்டு (Grenade) தாக்குதல் நடத்துவது.

ராணுவ மற்றும் அரசு கட்டிடங்களின் இருப்பிடத் தகவல்கள், வீடியோக்களை இவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து பகிர்ந்ததாக விசாரணையில் நிரூபணம் ஆகியுள்ளது. அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 7 தோட்டாக்கள், ஸ்ப்ரே பெயிண்ட், உளவுத் தகவல்கள் அடங்கிய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்கள்:

https://www.dailythanthi.com/news/india/dehradun-man-arrested-for-spying-for-pakistani-terrorists-wanted-to-avenge-sidhu-moosewala-killing

 


Share this: