பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வழங்கிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அபிஷேக் குமார், ரித்தேஷ் குமார் சிங் கைது!

Share this:

அசாம் (06 அக்டோபர் 2026): பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியுடன் (PIO) நெருங்கிய தொடர்பில் இருந்து, இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய அபிஷேக் குமார் சிங் மற்றும் ரித்தேஷ் குமார் சிங்-கை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் ஒருவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். அவர் தற்போது ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய புலனாய்வு அமைப்புகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அசாம் போலீசார் மேற்கூறிய 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர். அவர் தற்போது ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.

இவர்கள் பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, இந்திய ராணுவம் குறித்த முக்கியத் தகவல்களை வழங்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இருவரையும் மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைப்போம்” என்றார்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துவிட்டு பழியை இந்திய முஸ்லிம்கள் மீது சுமத்துவது, மதக்கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (Click here)

பீகார் வாலிபர் அபிஷேக் கைதானது எப்படி?

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி பீகாரைச் சேர்ந்த 31 வயது வாலிபர் ஒருவர் கவுகாத்தியில் கைது செய்யப்பட்டதாக அசாம் போலீசார் தெரிவித்தனர்.

அசாம் போலீசாரின் சிறப்பு அதிரடிப்படை (Special Task Force) அதிகாரிகளின் தகவலின்படி, பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் குமார் சிங் என்பவர் கவுகாத்தியில் உள்ள சத்காவ் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அங்கு நடத்தப்பட்ட சோதனையின்போது அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் பாதுகாப்புப் படைகள் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிக்கு வழங்கியதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். சத்தியமார்க்கம்.காம்

செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்

அபிஷேக் குமார் சிங்கின் தேசவிரோத நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அசாம் போலீசார் தெரிவித்தனர்.

தேஸ்பூரில் உள்ள ‘கஜ்ராஜ் எம்.ஐ.’ அமைப்பிடமிருந்து கிடைத்த ஆரம்பகட்ட தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. அசாம் போலீஸ் ஐ.ஜி. பார்த்த சாரதி மஹந்தா, சோனித்பூர் மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு பருண் புரகாயஸ்தாவுடன் இணைந்து விசாரணையை தீவிரப்படுத்தியதாக போலீசார் கூறினர்.

அபிஷேக் குமார் சிங் – இடமிருந்து ஒரு செல்போன், சிம்கார்டுகள் மற்றும் தேச விரோதச் செயல்களுக்கு ஆதாரமாக இருக்கும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், இந்திய ராணுவ பாதுகாப்புப் படைகள் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அளித்து வந்தது உள்ளிட்ட பல்வேறு தேச விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக அசாம் போலீசார் தெரிவித்துள்ளனர்.  விசாரணையின்போது அபிஷேக் குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரித்தேஷ் குமார் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து அசாம் காவல்துறை தொடர்ந்து கைதான இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. – சத்தியமார்க்கம்.காம்


ஆங்கிலச் செய்திகளுக்கு:

https://www.ndtv.com/india-news/bihar-man-arrested-in-guwahati-over-pakistan-intelligence-links-12137732

https://www.indiatodayne.in/assam/story/assam-stf-arrests-another-man-in-alleged-pakistan-espionage-case-1459218-2026-10-05


Share this: