Breaking: 200 கிலோ வெடிகுண்டுகளுடன் பாஜக பிரமுகர் ஹரி கோபால் கைது!

Share this:

உ.பி (09 நவம்பர், 2026) :  உத்தர பிரதேச மாநிலம் சித்ரகூட் (Chitrakoot) மாவட்டத்தில், பா.ஜ., பிரமுகர் ஹரி கோபால் மிஸ்ரா மற்றும் அவரது நண்பர் பப்பு திவாரி ஆகியோர் நாட்டை நாசமாக்கும் அதி பயங்கர வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன் மூலம் பாஜக பிரமுகர்கள் நிகழ்த்தவிருந்த மிகப் பெரும் தீவிரவாதம் தடுக்கப் பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 3ம் தேதி இரவு, மத்திய பிரதேச எல்லைக்கு அருகே போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொலிரோ வாகனம் ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தாமல் வேகமாக வந்தது. போலீசார் தடைகளை ஏற்படுத்தி வாகனத்தை நிறுத்தியபோது, வண்டியை விட்டுவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

போலீசார் வாகனத்தை சுற்றி வளைத்து சோதனை செய்ததில், 199 கிலோ ஜெலட்டின் குச்சிகள், 100 சிவப்பு பியூஸ்கள், 7 கட்டுகள் சிவப்பு கம்பிகள் மற்றும் 2.945 கிலோ வெடிமருந்து பொடி ஆகிய பயங்கர வெடிகுண்டுகள் சிக்கின.

உரிமம் இல்லை

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கிணற்றில் வெடி வைத்து பணிகளை மேற்கொள்வதற்காக “வெடிபொருட்களை” கொண்டு சென்றதாக ஹரி கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணையில், வெடிகுண்டுகளை வாங்கவும், கொண்டு செல்லவும், சேமித்து வைக்கவும் எவ்வித உரிமமும் இல்லாமல் சட்டவிரோதமாக வெடிகுண்டுகளை வண்டியில் நிரப்பிச் சென்றதை அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. – சத்தியமார்க்கம்.காம்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துவிட்டு பழியை இந்திய முஸ்லிம்கள் மீது சுமத்துவது, மதக்கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (லிங்க்)

தீவிர விசாரணை

சித்ரகூட் எஸ்.பி., அருண் குமார் சிங் கூறுகையில், ஹரி கோபால் மிஸ்ரா பாஜக சார்பில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர் என்றும், ஏற்கனவே மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தவர் என்றும் தெரிவித்தார்.

வெடிகுண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டன?, எங்கு கொண்டு செல்லப்பட்டன?, அவை எங்கே தீவிரவாதம் நிகழ்த்த திட்டமிடப்பட்டது? போன்றவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் வேறு நபர்கள் அல்லது பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பா.ஜ., மவுனம்

பா.ஜ.க. வில் நன்கு அறிமுகமான பிரமுகர் ஒருவர் மிகப்பெரிய அளவிலான வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.

வெடிகுண்டுகளின் சட்டவிரோத கொள்முதல் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். – சத்தியமார்க்கம்.காம்

 

BJP Leader Arrested with Nearly 200 Kg of Explosives in UP’s Chitrakoot; Party Maintains Silence

 


Share this: