அமைதியாக மக்கள் வசித்துவரும் பகுதிகளில், மதக்கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டு குண்டுகளை வெடிக்கச் செய்து பழியை சிறுபான்மையினர் மீது போட்டு விளையாடுவது பாஜக பிரமுகர்களின் வழக்கம்.
சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து பிற சமூகங்கள் மீது பழி போடுவதற்காகவும், மதக்கலவரம் நடத்துவதன் மூலம், கட்சியில் சுயலாபமும் பிரபலமும் அடைவதற்காக பாஜகவினர் அடிக்கடி இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை விசாரணைகளில் அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.
தன் காரை தானே எரித்தது, தன் கையை தானே வெட்டிக் கொண்டது, தன் பைக்கை தானே எரித்தது, தன் வீட்டுக்குள் தானே பெட்ரோல் பாம் வீசியது என ஏராளமான ஆதாரச் செய்திகள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ஆவணமாகியுள்ளன. (இங்கு காண்க)
சிறுபான்மையினர் மீது பழி போட்டு போரடித்ததாலோ என்னவோ, இம்முறை சற்று வித்தியாசமாக தன் மனைவி மீது பழி போடுவதற்காக, ஒரு பாஜக பிரபலம் தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.
கோபி (24-01-2023): கோபி அருகே குடும்ப தகராறில் மனைவி மற்றும் உறவினர்களை பழி வாங்க தன் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய மோடி பாசறை நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட கணபதிபாளையம் மாணுவக்காடு போயர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (43).
இவர் விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு அய்யம்மாள் (39) என்ற மனைவியும், விக்னேஷ் (15), அடல் பிகாரி வாஜ்பாய் (13), ராஜேஸ் (10) என்ற மகன்களும் உள்ளனர்.
சண்முகம், தேவேந்திர குல வேளாளர் “மோடி பாசறை”-யின் கோபி சட்டமன்ற தொகுதி நிர்வாகியாக உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் சண்முகத்திற்கும் மனைவி அய்யம்மாளுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கோபியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு 2 மகன்களுடன் அய்யம்மாள் சென்றார்.
நேற்று அதிகாலை சண்முகம், தனது வீட்டில் யாரோ பெட்ரோல் குண்டு வீசிவிட்டதாக கோபி போலீசில் புகார் அளித்தார்.
காவல்துறையினரின் விசாரணையில், மனைவி மற்றும் அவரது உறவினர்களை வழக்கில் சிக்க வைக்கலாம் என நினைத்து சண்முகமே தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
நன்றி: தினகரன்