கேரளாவில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி வீட்டில் 770 கிலோ வெடிகுண்டு பறிமுதல்!

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி வீட்டில் 770 கிலோ வெடிகுண்டு பறிமுதல்!
Share this:

திருவனந்தபுரம் (30 மார்ச் 2024): கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் வீட்டில் இருந்து பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்ட  770 கிலோ வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை கேரளாவின் அரசியல் கொலைகளின் மையமாக கண்ணூர் விளங்கி வந்தது. கேரளாவில் தென் பகுதிகளை ஒப்பிடும் போது, வடக்கு நோக்கி செல்ல செல்லதான் அரசியல் களத்தின் தகிப்பை நாம் உணர முடியும். அந்த வகையில், கேரளாவின் கண்ணூரில் அரசியல் களம் எப்போதுமே கொதித்துக் கொண்டே இருக்கும். இதனால் அரசியல் வன்முறைகளும், படுகொலைகளும் இங்கு சர்வ சாதாரணம்.

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும், பாஜக – ஆர்எஸ்எஸ் கரசேவர்களுக்கும் இடையேதான் இங்கு அதிகமாக மோதல்கள் இருக்கும். இவ்வாறான அரசியல் படுகொலைகள் கண்ணூரில் இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இருந்தபோதிலும், 1991-ம் ஆண்டுக்கு பிறகே இது பூதாகரமானது. அந்த ஆண்டில் இருந்து தற்போது வரை கண்ணூரில் 150-க்கும் மேற்பட்டோர் அரசியல் வன்முறைகளுக்கு இரையாகியுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் சூழலில், கண்ணூரில் நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கண்ணூர் மாவட்டம் பொயிலூரில் வெடிகுண்டு கடத்தல் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸார் அங்குச் சென்று சோதனை நடத்திய போது, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.  கொளவள்ளூர் காவல் ஆய்வாளர் சுமீத் குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சோபின் ஆகியோர் குழுவினர் மேற்கொண்ட சோதனையில் RSS நிர்வாகியின் குட்டு வெளியானது.

இதன் முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள் அனைத்தும் பயங்கரவாதச் செயல்களைப் பல்வேறு இடங்களில் நிகழ்த்த வேண்டி விநியோகிப்பதற்கு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அங்குள்ள ஆர்எஸ்எஸ் நிர்வாகியான ’வடக்கையில் பிரமோத்’ மற்றும் அவரது உறவினர் சாந்தா ஆகியோர் வீடுகளில் இருந்து மூட்டை மூட்டையாக வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகளின் மொத்த எடை 770 கிலோ ஆகும்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இவ்வாறு மூட்டையாக மூட்டையாக வெடிகுண்டுகளைப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதையடுத்து, சிக்கியுள்ள தீவிரவாதி சாந்தாவிடம் இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவாகியுள்ள RSS பயங்கரவாதியான ’வடக்கையில் பிரமோத்’-தை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கெட்டில் சிறிய வகை பென் டார்ச் பேட்டரி வைத்திருந்தாலே, முஸ்லிம் ஒருவரை சந்தேக வளையத்தில் கொண்டு வரும் தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency, NIA), 770 கிலோ வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கையும் களவுமாக பிடிபட்ட பிறகும் மவுனம் காப்பது இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

நன்றி: கலைஞர் செய்திகள்
https://www.kalaignarseithigal.com/india/2024/03/31/over-770-kg-explosives-found-at-residences-of-rss-leader-in-kerala

நன்றி: சமயம்.காம்

https://tamil.samayam.com/latest-news/india-news/kerala-police-seized-770-kg-of-explosives-in-rss-functionary-house-in-kannur/articleshow/108905470.cms


Share this: