கன்னியாகுமரி பள்ளிவாசல், சர்ச்-களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விநாயகர் கோயில் பூசாரி கதிரேஷ் கைது!

bomb threat priest kadiresh1
Share this:

கன்னியாகுமரி (12 ஜனவரி 2024): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு கடிதம் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புவியூர் பகுதியை சேர்ந்த விநாயகர் கோயில் பூசாரி கதிரேஷ் (34) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல்

குளச்சல், பள்ளி முக்கு சந்திப்பில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலுக்கு கடந்த திங்கள்கிழமை (ஜன. 8, 2024) வந்த மிரட்டல் கடிதத்தில், ‘ரூ. 20 கோடி தர வேண்டும். இல்லையெனில் 8 மசூதிகளை ஒரே நேரத்தில் வெடிகுண்டு வைத்துத் தகா்ப்போம்’ எனக் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து குளச்சல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

bomb threat priest kadiresh
bomb threat priest kadiresh

இந்நிலையில், தக்கலை அருகே திருவிதாங்கோடு பள்ளிவாசலுக்கும், நாகா்கோவில் மணிமேடை பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கும் புதன்கிழமை மிரட்டல் கடிதங்கள் வந்தன. (சத்தியமார்க்கம்.காம்)

அவற்றில், மசூதியைக் குண்டு வைத்துத் தகா்க்க உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. திருவிதாங்கோடு பள்ளிவாசலுக்கு வந்த கடிதம் தென்தாமரைக்குளம் அருகே புவியூா் பகுதியிலிருந்து மனோகரன் என்ற பெயரில் அனுப்பப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி வாசல் நிர்வாகிகள், குளச்சல் ஏ.எஸ்.பி.பிரவின் கெளதம் இடம் புகார் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஏ.எஸ்.பி. பிரவின் கெளதம் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி வாசல் முழுவதும் வெடிக்குண்டு கண்டுபிடிக்கும் கருவிகளுடன் சோதனை நடத்தினர்.

சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மோப்பநாயும் பள்ளிவாசல் வளாகத்தினுள் மோப்பம் பிடித்தது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மேற் குறிப்பிட்ட முகவரியில் அரிகிருஷ்ணன் பெயரில் எவருமில்லை என தெரிய வந்தது. இந்த மிரட்டல் கடிதம் விடுத்தவரை கண்டுபிடிக்க போலீசார் சைபர் க்ரைம் போலீசின் உதவியிடன் விசாரணை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி அருகே சின்னமுட்டத்தில் உள்ள தேவாலயத்துக்கும் மிரட்டல் கடிதம் வந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில், கடிதங்களில் குறிப்பிடப்பட்ட முகவரிகள் போலி எனத் தெரியவந்தது.

இவை தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் விசாரித்து வந்தனர்.

அதிரடி கைது!

காவல்துறையின் விசாரணையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புவியூர் பகுதியை சேர்ந்த விநாயகர் கோயில் பூசாரி கதிரேஷ் (34) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். (சத்தியமார்க்கம்.காம்)

விநாயகர் கோயில் பூசாரியாக பணிபுரிந்து வரும் இவர், கோயில் நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட ஊழல் முறைகேடு தொடர்பாக கேள்வி கேட்ட கோயில் நிர்வாகத்தினரைப் பழிவாங்குவதற்காக முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு இந்துக்கள் வெடிகுண்டு வைக்க இருப்பதாக கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், விநாயகர் கோயில் நிர்வாகத்தினரின் பெயரை பயன்படுத்தி மிரட்டலில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம், தமிழகத்தில் இந்து-முஸ்லிம்-கிறித்துவ மதத்தினர் இடையே பெரும் கலவரம் ஏற்படுத்தி ஆதாயம் தேட இதைச் செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மதக்கலவரம் ஏற்படுத்தும் நோக்கில், சொந்த வீட்டில் வெடிகுண்டு எறிந்துவிட்டு அதனை முஸ்லிம்கள் மீது  பழி சுமத்துவது சங் பரிவாரங்கள் காலம் காலமாக செய்து வரும் வழக்கம்.  சமீபத்திய செய்தி: ராமர் கோயிலைத் தகர்ப்போம் – முஸ்லிம் பெயரில் மிரட்டல் அனுப்பிய ஓம்பிரகாஷ் கைது! 

இம்முறை சற்று வித்தியாசமாக, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு இந்துக்களின் பெயரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் கோயில் பூசாரி கதிரேஷ் பாஜக-வில் தொடர்புடையவரா என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நன்றி: சன் நியூஸ் (https://x.com/sunnewstamil/status/1745674745511604249?s=20)

நன்றி: தினகரன் (https://www.dinakaran.com/kanyakumari_church_mosque_bombthreat_arrest/)

நன்றி: ஜீ தமிழ் தொலைக்காட்சி (https://www.youtube.com/watch?v=t5qjF494-GU)


கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (லிங்க்)


(சத்தியமார்க்கம்.காம்)


Share this: