ஒன்றியத்தில் பிரதமராக மோடி பதவி ஏற்றதிலிருந்து இன்றுவரை பிஜேபி ஆள்வது வஞ்சகங்களின் துணையுடனே என்பதை வெகு அண்மையில் வெளிவரும் உண்மைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
வஞ்சகம் 1)
எக்காலத்திலும் தேர்தல் ஆணையரின் மீது வழக்குத் தொடர முடியாதபடி அவருக்குப் பாதுகாப்பு அரணாக ஒரு சட்டத்தையே நிறைவேற்றியது.
வஞ்சகம் 2)
பிரதமர், உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஆகிய மூவர் இடம்பெறும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் உயர்மட்டக் குழுவை, சட்ட விரோதமாக மாற்றியமைத்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதிக்குப் பதிலாகப் பிரதமர் விரும்பும் ஒருவரை உயர்மட்டக் குழுவில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டது.. அதற்காக உச்சநீதிமன்றத்தையே பயன்படுத்தி 2023இல் தீர்ப்பு ‘வாங்கி’க் கொண்டது.
வஞ்சகம் 3)
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பிஜேபிக்கு இணங்காத / எதிரான மாநிலங்களாக இருந்ததால் சிறப்புத் தீவிர மறு ஆய்வு (SIR) மூலம் கோடிக்கணக்கான பிஜேபி எதிர்ப்பாளர்களை இணங்கண்டு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியது.
வஞ்சகம் 4)
பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான மத்திய புலனாய்வு அமைப்புகளான ED, CBI போன்றவற்றைப் பயன்படுத்தி மிரட்டி அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைக் குறிப்பாக, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் (NCP) ஆகிய கட்சிகள் இரண்டாகப் பிளந்ததும், அதில் ஒரு பிரிவினர் பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) கூட்டணி அமைத்து ஆட்சியை மாற்றியதும்.
ஜந்தர் மந்தர் 2.0 ஸீஜேபி அறிவிப்பு https://www.facebook.com/watch/?v=2712497275882013

oOo

அசைக்க முடியாத குற்றச்சாட்டுகள்
தலைமைத் தேர்தல் ஆணையகத்தின் அட்டூழியங்கள் அம்பலம்:
(சத்தியமூர்த்தி ராமானுஜம் போஸ்ட்)
வாக்காளர் பட்டியல் திருத்தம் முதல் வாக்குப்பதிவு முறைகேடு வரை வெடிக்கும் குற்றச்சாட்டுகள்!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) உள்கட்டமைப்பில் நிலவும் கடுமையான பிளவுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (The Indian Express) வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான புலனாய்வு அறிக்கை தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்’ (SIR) மூலம் சுமார் 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயும் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருவது ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே வெடித்த மோதல்!
இந்தியத் தேர்தல் ஆணையம் மூன்று உறுப்பினர்களைக் கொண்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இதர ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் சம பலம் கொண்டவர்கள்.
ஆனால், கடந்த சில மாதங்களில் தங்களுக்குத் தெரியாமலேயே பல முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாகத் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.
வாக்காளர்களைச் சேர்ப்பது, நீக்குவது, தரவுப் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற மிக முக்கியமான விவகாரங்களில் தங்களை விலக்கி வைத்து, கலந்தாலோசிக்காமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொழில்நுட்பக் கட்டுப்பாடும் அதிகாரத்துவப் போரும்
வாக்காளர் பட்டியலுக்கான டிஜிட்டல் தளங்களை (ERONET, ECI-Net) தங்களின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக ஆணையத்தில் உள்ள ஐ.டி துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன:
* சட்டப்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளே வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் இறுதி முடிவெடுக்கக் கூடியவர்கள். ஆனால் சாப்ட்வேர் (Software) கட்டுப்பாடுகள் மூலம் தங்களால் முறையான திருத்தங்களையோ அல்லது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீக்கப்பட்ட பெயர்களைத் திரும்பப் பெறவோ முடியவில்லை என்று கோவா மற்றும் பிற மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் வெளிப்படையாகவே புகார் தெரிவித்தனர்.
* ஆணையத்தின் ஐ.டி பிரிவைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி சஞ்சய் குமார், விதிகளை மீறி செயல்பட்ட ஐ.டி துறையைக் கண்டித்தபோது, ஒரு தற்காலிக அதிகாரி அவசர அவசரமாக அந்த அதிகாரியின் பணி ஒதுக்கீட்டை மாற்றி, தேர்தல் ஆணையர்களின் நேரடி மேற்பார்வைத் தொடர்பையே துண்டித்துள்ளார். இதனை எதிர்த்து ஆணையர்கள் இருவரும் நாட்டின் அமைச்சரவைக் செயலர் டி.வி. சோமநாதனுக்குக் கடிதம் எழுதியதுடன், அந்தத் தற்காலிக உத்தரவையும் ரத்து செய்தனர்.
இந்த விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, செஃபாலஜிஸ்ட் யோகேந்திர யாதவ் மற்றும் பரகாலா பிரபாகரின் கடுமையான குற்றச்சாட்டுகள் ஏற்கனவே வைக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் அரசியல் பார்வையாளர்களின் குரல்களும் தேர்தல் முறைகேடுகள் குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளன:
ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகள்:
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களிலும், பொதுத்தேர்தலிலும் டிஜிட்டல் முறையிலும் வாக்காளர் பட்டியலிலும் திட்டமிட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். போலி வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் திட்டமிட்ட நீக்கங்கள் இடம்பெற்றுள்ளதை அவர் பகிரங்கமாக அம்பலப்படுத்தினார். (only in Bangalore Central Lok Sabha constituency, specifically in the Mahadevapura Assembly segment Vote chori counts 1,00,250).
யோகேந்திர யாதவின் எச்சரிக்கை:
அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ், SIR என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது சாதாரண நடைமுறை அல்ல என்றும், பல தசாப்தங்களாக வாக்களித்து வரும் கோடிக்கணக்கான மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒரு ஆபத்தான செயல் என்றும் கடுமையாக விமர்சித்தார். பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கோடிக்கணக்கான மக்களின் பெயர்கள் முறையின்றி நீக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியதுடன், இது உலகளாவிய வயதுவந்தோர் வாக்குரிமையின் அடித்தளத்தையே தகர்ப்பதாக எச்சரித்தார்.
நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகரின் அதிர்ச்சித் திறனாய்வு:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார நிபுணருமான பரகால பிரபாகர், தேர்தல் முறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் குறித்து மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். “SIR என்பது வாக்காளர்கள் அரசாத்தைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, அரசாங்கமே தனக்குத் தேவையான வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு வழியாக மாற்றப்பட்டுள்ளது” என்று அவர் சாடியுள்ளார். தன்னிச்சையாக லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவது ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையைச் சிதைப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே நிலவும் உட்கட்சி மோதல்களும், ஆளுங்கட்சியின் நெருக்கமான பிரமுகர்கள் உட்பட பலரும் எழுப்பும் வெளிப்படையான கேள்விகளும் இந்தியத் தேர்தல் முறையின் வெளிப்படைத்தன்மை மீது மாபெரும் சந்தேக நிழலைக் கவிழ்த்துள்ளன. வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது அவசியம்தான்; ஆனால், அந்தத் தூய்மைப்படுத்தும் பணியே சாதாரண குடிமக்களை சந்தேகத்திற்கிடமாக்கும் சோதனையாக மாறுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
நன்றி : Sathyamurthy Ramanujam’s post
