சூரத்தில் குண்டு வைத்தது மோடி! – பூரி சங்கராச்சாரியார்.

Share this:

புது தில்லி: கடந்த சில தினங்களுக்கு முன்னர் குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் தொடர் குண்டுகள் வெடித்த அடுத்தத் தினங்களில் சூரத்திலிருந்து வெடிக்காத பல குண்டுகளைக் குஜராத் காவல்துறை கண்டுபிடித்து அகற்றியிருந்தது. இந்தக் குண்டுகள் வைக்கப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னணியில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி செயல்பட்டுள்ளதாக பூரி சங்கராச்சாரியார் குற்றம் சுமத்தியுள்ளார். குவஹாத்தியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வைத்து மேற்கண்டக் குற்றச்சாட்டை சங்கராச்சாரியா ஆதோஷ் ஜானந்தேவ் தீர்த் சுமத்தியுள்ளார்.

வெடிகுண்டுச் சதியாலோசனை மூலம் நாட்டில் வர்க்கப்பேதத்தை வளர்த்து அதன் மூலம் இந்து மத மக்களின் ஓட்டுகளைக் கொய்வதே நரேந்திரமோடியின் இலட்சியம் எனவும் சங்கராச்சாரியார் கூறினார். அடுத்து வரும் தேர்தலை மனதில் வைத்து மோடி தனது செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அமைக்கின்றார். ஒருவேளை அகமதாபாத் உட்பட சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் ஐ.எஸ்.ஐ முதலான சர்வதேச இயக்கங்களுக்குத் தொடர்பிருக்கலாம். ஆனால், சூரத்தில் 24 இடங்களிலிருந்துக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நம்பத்தகுந்ததல்ல. இதன் பின்னணியில் சதியாலோசனை உண்டு.


சுய இலாபத்திற்காக ஹிந்து தர்மத்தை உபயோகிக்க மோடி முயற்சிக்கின்றார். ஹிந்து ஓட்டுக்களின் மீது குறி வைத்துள்ள மோடியில் இத்தகையச் செயல்பாடுகள் ஹிந்து தர்மத்திற்கு எதிரானது” என சங்கராச்சாரியார் கருத்து தெரிவித்தார்.


சூரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளின் பின்னணியில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி தலைமையிலான சதி உண்டு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள இச்சந்தர்ப்பத்தில், இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற மாநில அரசு முன்வர வேன்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு-கஷ்மீரில் வர்க்கபேதத்தை வளர்க்க பாஜக முயலுகின்றது என கட்சி பிரமுகர் மனீஷ் திவாரி குற்றம் சுமத்தினார்.


“ஹிந்து சன்னியாசிகளில் முக்கியமானவரான சங்கராச்சாரியாரின் இக்குற்றச்சாட்டிற்கான உண்மையான நிலவரத்தை வெளிக்கொணர சி.பி.ஐ விசாரணை வேண்டும். தேர்தல்கள் நெருங்கும் வேளைகளில் பாஜக காண்பிக்கும் ஹிந்துமத ஆதரவு கள்ளத்தனமானதாகும். அதிகாரத்தில் இருந்த வேளையில் ஹிந்துக்களை மறந்த பாஜக ஹிந்து சமுதாயத்தின் மீது உண்மையான நேசம் உண்டு எனில், நைனாதேவி கோவிலில் விபத்து நிகழ்ந்தபொழுது எதுவுமே செய்யாதது ஏன்” என்றும் திவாரி கேள்வி எழுப்பினார்.


“பாஜக பிரச்சனைகளை நேரிடும் பொழுதெல்லாம் நாட்டில் குண்டுகள் வெடித்துள்ளன. தெஹல்காவின் மூலம் பாராளுமன்றம் அமளியில் இருக்கும் பொழுது பாராளுமன்றத்தாக்குதலும் கர்நாடகா தேர்தல் நேரம் ஜய்பூரிலும் தற்பொழுது காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்று பாஜகவின் முகத்தில் கரிபூசப்பட்ட பொழுது அகமதாபாத்திலும் குண்டுகள் வெடித்துள்ளன. வெடிகுண்டு நிர்மாணத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா ஈடுபடுகின்றது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சூரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளுக்குப் பின்னணியிலும் பாஜகவே செயல்பட்டுள்ளது” என இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் பிரமுகர் திக் விஜய் சிங் குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.