மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடையோர் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்!

இந்துப் பயங்கரவாதிகளின் வீட்டில் வண்டி வண்டியாய் வெடி மருந்துகள்!

முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று ஜோடிக்கப்பட்டு வரும் சூழலில்,

தானே நகர தியேட்டர் ஒன்றில் வெடித்த வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன் படுத்தப் பட்ட வெடிமருந்துகள், மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் வீடுகளிலிருந்து கைப்பற்றப் பட்டுள்ளன.

புதிய மும்பையின் வாஷி பகுதியில் உள்ள விஷ்ணு தாஸ் பாவே அரங்கத்திலும் தாணே பகுதியில் உள்ள கட்காரி ரங்கயாதன் அரங்கத்திலும் மிகப்பெரிய உயிர்சேதத்தை விளைவிக்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்ட நால்வரை மஹாராஷ்டிரக் காவல் துறைக் கைது செய்துள்ளது.

அவர்கள் பெயர்கள் பின்வருமாறு:

1. மங்கேஷ் தின்கர் நிகம்
2.
ரமேஷ் ஹனுமன்த் கட்கரி
3.
சந்தோஷ் ஆங்ரே மற்றும்
4.
விக்ரம் பாவே

கைது செய்யப்பட்ட இந்த நால்வரும் Janjagruti Samiti மற்றும் Sanatan Sanstha ஆகிய ஹிந்துத்துவாக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ராய்காட் மாவட்டத்திலுள்ள வார்சாய் கிராமத்தில் உள்ள விக்ரம் பாவே மற்றும் மங்கேஷ் தின்கர் நிகம் ஆகியோரின்வீட்டிலும் விளைநிலத்திலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

அதில் துப்பாக்கிகளும், 92 குண்டுகளும், 20 டெட்டோனேட்டர் குண்டுகளும், 19 ஜெலட்டின் குச்சிகளும், பெரும் அழிவை ஏற்படுத்தவல்ல மிக அதிக அளவிலான அமோனியம் நைட்ரேட் தூளும் கைப்பற்றப்பட்டன.

இது தவிர டைம் பாம் மற்றும் ரிமோட் கண்ரோலில் வெடிக்கச் செய்யும் வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைமர்களும் வோல்ட்டேஜ் மீட்டர்களும் ரேடியோ சர்க்கியூட் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டன.

பயங்கரவாதத் தடுப்புப் படையினரின் இந்தத் திடீர் சோதனையைப் பற்றி எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு வெடிமருந்துகளை அவசரமாக வெடிக்க முயன்ற ஹரி பாவ் தேவ்கர் என்பவனையும் காவல்துறை கைது செய்தது.

இதில் மங்கேஷ் என்பவன், கடுமையான விசாரணைக்குப் பிறகே பெரும் அளவிலான வெடிமருந்துகளை சட்டாரா மாநிலத்தில் மறைத்து வைத்துள்ளதை ஒப்புக் கொண்டதாகக் காவல் துறை அறிவித்துள்ளது. இந்தத் தகவல் கிடைத்தவுடன் விரைந்த காவல் துறை, அவன் கொடுத்தத் தகவல்படி, வெடிகுண்டுகள் செய்யப் பயன் படுத்தும் பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நடக்கவிருந்த இன்னொரு மிகப் பெரும் சமூக அழிவு தடுக்கப்பட்டுள்ளது.

தானே நகரத்தின் கட்காரி ரங்கயாதன் அரங்கத்தில் இவர்கள் நிகழ்த்திய கொடூர வெடிகுண்டு சம்பவத்தின் மூலம் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அதில் இவர்கள் டெட்டோனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைம் பாம் ஆகியவற்றைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

புதிய மும்பையிலுள்ள விஷ்ணு தாஸ் பாவே தியேட்டரில் இவர்கள் நிகழ்த்த இருந்த மிகப் பெரும் உயிர்ச்சேதம் இறுதி நேரத்தில் கிடைத்த தகவல்கள் மூலமாக குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய சுட்டிகள் சில:

குஜராத் போலி என்கவுண்டர்: தொடரும் அதிர்ச்சிகள்! (Updated)

போலி என்கவுண்டர்கள்: குஜராத் அரசிற்கு உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு!

மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!