ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்!

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்!

அண்மைக் காலமாக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக மாறி வருவது தெரிந்ததே!

கடந்த 19.10.2008 அன்று கேரள மாநிலம் தலச்சேரியை அடுத்த தர்மடத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வீட்டுத் தோட்டத்தில் இருந்து சக்தி வாய்ந்த 20 வெடிகுண்டுகளைக் காவல்துறை கண்டெடுத்தது. தர்மடத்தில் உள்ள பரீக்கடவு, யு.எஸ்.கே சாலையில் இருக்கும் ‘ஷோபா ஸதனம்’ என்பது ஆர்.எஸ்.எஸ் தலைவர் விபின் தாஸ் என்பவருக்குச் சொந்தமானதாகும். அந்த வீட்டுத் தோட்டத்தில் இருந்து இந்த அதி சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. (புகைப்படம் நன்றி : டெஹல்கா.காம்)

தலச்சேரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் யு. பிரேமிற்குக் கிடைத்த இரகசியச் தகவலைத் தொடர்ந்து, கடந்த 19 ஞாயிறு மாலை 4.15க்கு, தர்மடம் சப் இன்ஸ்பெக்டர்களான, எம்.வி. அனில் குமார், பி. சஜி குமார் ஆகியவர்களின் தலைமையில் நடைபெற்ற அதிரடிச் சோதனையில் இவ்வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

வீட்டின் முன்பகுதியிலிருந்து 15 மிட்டருக்கு அப்பால் உள்ள தென்னை மரத்தின் அடிப்பாகத்தில் பிளாஸ்டிக் பக்கட்டினுள் பிளாஸ்டிக்கினால் பாதுகாப்பாக முழுவதும் மூடப் பட்ட நிலையில் சுமார் 20 குண்டுகள் மறைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் மிக சக்தி வாய்ந்தவைகளாகும்.

அப்பகுதி ஆர்.எஸ்.எஸ் தலைவரான விபின்தாஸ் மீது ஏற்கெனவே பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரைக் கிரிமினல் குற்றவாளி என காவல்துறை உறுதி செய்தது. கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் மிக சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை எனவும் அவை செடி-கொடிகள் அடந்த தோட்டத்தில் தென்னை மரத்தின் அடிப்பாகத்தில் ஆழக் குழிதோண்டி மறைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை கூறியது. தற்பொழுது தர்மடம் காவல்நிலையத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளைக் கண்ணூரிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து செயல் இழக்கச் செய்வர் எனவும் காவல்துறை கூறியது.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியின் அண்மைமையில் உள்ள அண்டலூர், எலிப்ரம்தோடு என்ற பகுதியில் இருந்து இதே மாதிரியிலான நான்கு வெடிகுண்டுகளைக் காவல்துறை கைப்பற்றியிருந்தது.

ஏற்கெனவே தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் தென்காசியில் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளுக்கான வெடிபொருட்கள், கேரளத்திலிருந்துதான் சப்ளை செய்யப்பட்டன என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பாஜக மற்றும் பஜ்ரங்தள் பிரமுகர்களின் விடுகளிலும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களிலும் தொழிற்சாலைகளிலும் வெடிகுண்டு உற்பத்தி சாலைகளும் வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்ட பின்னரும் தென்காசி, நான்டட், மாலேகோவ் போன்ற இடங்களில் வெடித்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சங்கபரிவாரத்தினரே செயல்பட்டுள்ளனர் என்பது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டப் பின்னரும் சங்கபரிவார அமைப்புகளின் மீது உளவுத்துறை மற்றும் காவல்துறையின் கண்கள் பதியாமல் இருப்பதும் அவர்களின் செயல்பாடுகள் மீதான தீவிர விசாரணைகளையும் நடத்த அரசுகள் முன்வராமல் இருப்பதும் பொதுமக்களிடையே மிகுந்த சந்தேகங்களை எழுப்பியுள்ளன.