தேசவிரோதி பால்தாக்கரேயும் ஓட்டுப்பொறுக்கி காங்கிரஸ் அரசும்!

"குண்டுவைத்த இந்துத் தீவிரவாதிகளுக்கு நாங்கள் அடைக்கலம் கொடுப்போம்; அவர்களுக்கு சட்ட உதவி, நிதி உதவிகள் செய்வோம்; அவர்கள் குண்டு வைத்து விட்டு முஸ்லிம்கள் செய்ததாகத் திசை திருப்பியது சரியான செயல்தான். அவர்கள் இன்னும் இது போன்று செய்ய வேண்டும்; அதற்கு நாங்கள் முழு உதவியும் ஒத்துழைப்பும் நல்குவோம்; உன்னால் என்னடா செய்ய முடியும்?; என்னைக் கைது செய்து விடுவாயா? தைரியம் இருந்தால் என்னைக் கைது செய்துபார்"

 

இது ஏதோ, "விஜயகாந்த் திரைப்படத்தில் வரும் தீவிரவாதி, அரசுக்கு எதிராக அடிகுரலில் முழங்கும் முழக்கம்" எனத் தவறாக கருதி விட வேண்டாம். திரைப்படத்தை விஞ்சும் விதத்தில் மஹாராஷ்டிராவில் அட்டூழியம் புரிந்து வரும் பால்தாக்கரே எனும் தேசவிரோதி கூறும் வாசகங்கள்தான் இவை.

 

இவற்றைப் பார்த்தும் கேட்டும் கொண்டும் இருக்கும் கேடுகெட்ட மத்திய, மாநில அரசுகள்!

 

கையாலாகாத நிலையில் கைப்பிசையும் காங்கிரஸ் ஓட்டுப்பொறுக்கிக் கோழைகள்!

 

என்று நாட்டு மக்கள் கருதும் விதத்தில் தேசபாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் சவால் விடும் விதத்தில் செயல்படும் பால்தாக்கரேயின் அறைகூவலைக் குறித்து வெப்துனியா கூறுகிறது:

 

மாலேகாவ் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூருக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தம்மைக் கைது செய்ய வேண்டுமென்றால் கைது செய்து பார்க்கட்டும் என்று சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.

 

மாலேகாவ் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முக்கியக் குற்றவாளியாக பிரக்யா சிங், முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், பிரகாயாவைக் காப்பாற்றுவதற்காக சிறந்த வழக்கறிஞர்களை அனுப்பத் தயாராக இருப்பதாக அண்மையில் கூறியிருந்த பால்தாக்கரே, பிரக்யாவை புகழ்ந்து மேலும் பல கருத்துக்களையும் கூறியிருந்தார்.

 

இதனிடையே மகாராஷ்ட்ரா முதலமைச்சர் விலாஸ் ராவ் தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்று நான்கு ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி குருதாஸ் காமத்,பிரக்யாவுக்கு ஆதரவளிக்கும் பால் தாக்கரேவை சிறையிலடைக்க வேண்டும் என ஆவேசமாக கூறியிருந்தார்.

 

இந்நிலையில், காமத்தின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக தமது கட்சி பத்திரிகையான ' சாம்னா'வில் தலையங்கம் எழுதியுள்ள பால்தாக்கரே, " முஸ்லிம்களை குளிர்விக்கக் காங்கிரஸ் கட்சியினர் எப்போதெல்லாம் விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் எனது கைது குறித்து கனவு காண்பார்கள் " என்று பரிகாசமாக குறிப்பிட்டுள்ளார்.

 

" காமத் என்னை கைது செய்ய வேண்டும் என பேசியபோது முதலமைச்சர் தேஷ்முக் கூட தர்மசங்கடத்தில் நெளிந்திருக்க வேண்டும்.மாலேகாவ் குண்டு வெடிப்பு விசாரணை நிர்ப்பந்தத்தின் பேரில் மேற்கொள்ளப்படுவதோடு, 'இந்து தீவிரவாதிகள்' என்ற முத்திரை குத்தவும் முயற்சிகள் நடக்கிறது.

 

கைது செய்யப்படுவது குறித்து நான் எப்போதுமே அச்சமுற்றதில்லை.நான் கைது செய்யப்படப் போவது இந்துஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு ஆதரவாக பேசியதற்காகவா அல்லது மகாராஷ்ட்ராவில் மராத்திய புகழுக்கு ஏற்படவிருந்த ஆபத்தை தடுத்து நிறுத்தியதற்காகவா என்பதை மகாராஷ்ட்ரா அரசு தெளிவுப்படுத்திட வேண்டும்.

 

மறைந்த முன்னாள் மகாராஷ்ட்ரா முதலமைச்சர் வசந்த்ராவ் நாயக், முன்னர் என்னை கைது செய்து புனேவிலுள்ள ஏர்வாடா சிறையிலடைத்தபோது மகாராஷ்ட்ரா முழுவதும் கலவரம் நடைபெற்றது; அதன் பின்னர் அமைதி காக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுத்ததை தற்போது நினைவு கூர்கிறேன்.

 

பிரக்யா வழக்கு தொடர்பாக என்னை கைது செய்வதன் மூலம் இந்துத்வா சக்திகளை நசுக்கிவிட்டு, உங்களது முஸ்லீம் வாக்கு வங்கிகளை பலப்படுத்திக் கொள்ளலாம் என்பதுதானே உங்களுடைய (காங்கிரஸ்) எளிமையான கணக்கு?" என அதில் மேலும் கூறியுள்ளார் பால்தாக்கரே.

 

நன்றி: வெப்துனியா

 

இவ்வளவு வெளிப்படையாகக் குண்டுவைத்தவர்களுக்கு ஆதரவும் பண உதவியும் செய்து விட்டு, குண்டு வைத்ததை நியாயப்படுத்திக் கொண்டு, இப்பொழுது நேரடியாக "என்னைக் கைது செய்தால் மஹாராஷ்ராவில் கலவரம் வெடிக்கும்" என இந்திய இறையாண்மைக்கு எதிராகக் கொக்கரிக்கும் இந்திய பயங்கரவாதிகளின் தலைவனை வெளியே விட்டு வைப்பது நாட்டு நலனுக்கு நிச்சயமான ஆபத்தை ஏற்படுத்தும்.

 

ஏற்கெனவே இந்தியா முழுவதும் சங் பரிவாரத்தினரின் திட்டமிட்ட அட்டூழியங்கள் பல அரங்கேறி வரும் சூழ்நிலையில் இத்தகைய தேச விரோதிகளின் அகங்காரக் கொக்கரிப்புகளைக் கண்டும் காணாததுபோல் செயல்படும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் நாட்டைப் பிளவுபடுத்தத் துடிக்கும் இத்தகைய தேச விரோத சக்திகளுக்கு மேலும் ஊக்கத்தையே அதிகரிக்கும்.

 

அரசையும் நீதிமன்றங்களையும் சட்டங்களையும் மதிக்காமல் "எங்களை எதுவும் கட்டுப்படுத்தாது; நாங்கள் எதற்கும் கட்டுப்பட மாட்டோம்" என அவிழ்த்து விடப்பட்டப் பன்றிகளாக நாட்டை அசிங்கம் செய்துவரும் இத்தேசவிரோதிகளின் செயல்பாடுகளை ஒழித்துக் கட்டுவதன் மூலம் நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப் படவேண்டும். இல்லையேல் மென்மேலும் இந்தியாவுக்குத் தலைகுனிவுதான் ஏற்படும்.