வெடிகுண்டுகளின் பிறப்பிடம் ஆர்.எஸ்.எஸ்!

வெடிகுண்டு தயாரிக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அசம்பாவிதத்தில் குண்டு வெடித்து இரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலியாகினர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள கூத்துபறம்பு, செறுவாஞ்சேரியில் உள்ள அத்தியரக்கா என்ற இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தினசரி பயிற்சி செய்யும்் ஒரு கோவிலின் பின்பக்கம் நேற்று காலை 7 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ் மணடல செயற்குழு உறுப்பினர்களான ப்ரதீபன்(38), திலி என்ற திலீப்(35) ஆகிய இருவரும் இச்சம்பவத்தில் பலியாகினர்.

இதில் ப்ரதீபன், அஸ்னா என்ற பெண் குழந்தையைக் குண்டுவீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியாவார்.

நேற்றுக் காலை 7 மணியளவில் கோயிலின் பின்புறம் பயங்கரமான குண்டு வெடிக்கும் சப்தம் கேட்ட பொதுமக்கள், சம்பவ இடத்தில் சிதறிய நிலையில் கிடந்த உடல்களைக் கண்டனர். பக்கத்திலுள்ள கிணற்றில் தெறித்து விழுந்த நிலையில் ப்ரதீபனின் உடல் கிடந்தது. அவரின் இடுப்பின் கீழ்பாகம் முழுவதும் சிதைந்த நிலையில் இரு கால்களும் துண்டு துண்டாகக் கிடந்தன. திலீபின் உடல் முழுவதும் வெந்துபோன நிலையில் காணப்பட்டது. வெடித்த குண்டின் வீரியத் தாக்கத்தால் பக்கத்திலுள்ள தென்னை, பனை போன்றவை கருகியிருந்தன. ப்ரதீபன் குண்டு தயாரிப்பிலும் அதனைக் கையாள்வதிலும் மிகத் தேர்ச்சி பெற்றவன் என ஊர்மக்கள் கூறுகின்றனர்.

{youtube}U2P1xH-wCm4{/youtube}

இதற்கிடையில் திருவிழாவிற்காகக் கொண்டு வந்த வெடிமருந்தைப் பாதுகாப்பாக வைப்பதற்கிடையில் ஏற்பட்ட கவனக்குறைவில் வெடிமருந்து வெடித்துச் சிதறியதனாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக ஆர்.எஸ்.எஸ் – பாஜக விளக்கம் கூறியுள்ளது. ஆனால், திருவிழாவிற்குப் பயன்படுத்தும் வெடிமருந்துகள் இவ்வளவு வீரியம் வாய்ந்தவை அல்ல என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். கடந்த இரவில் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் கோவிலில் உற்சவம் நடந்திருந்தது. நள்ளிரவோடு உற்சவம் முடிந்திருந்தது. அதற்குப் பின்னர், குண்டு தயாரிப்பில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஈடுபட்ட வேளையிலேயே இச்சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.

சம்பவத்தில் இறந்தவர்களின் உடல் சின்னாபின்னமாகச் சிதறியிருக்கும் நிலையைப் பார்க்கும் பொழுதும் அப்பகுதியின் சூழலைப் பார்க்கும் பொழுதும் சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. சம்பவம் நடந்த உடனேயே காயமடைந்தவர்களை ஆர்.எஸ்.எஸ்ஸினர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளது தெரிவதாக காவல்துறை கூறியுள்ளது.

வழக்கம் போல், அனுமதியின்றி கைவசம் வைத்திருந்த வெடிபொருட்களைக் கவனமின்றி கையாண்டதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் 2000 – த்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸினர் வீசிய குண்டில் அஸ்னா என்ற மாணவி உட்பட 3 பேருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. அப்பொழுது அஸ்னாவிற்கு 6 வயது. அன்று தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அஸ்னா, தனது வலது காலை இழந்திருந்தார்்.

அக்குண்டு வெடிப்பு வழக்கில் சென்ற வாரம், பிரதீபன் உட்பட 14 ஆர்.எஸ்.எஸ் – பாஜக தொண்டர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருந்தது. வரும் வெள்ளியன்று இவர்களுக்கான தண்டனை விதிக்கப்பட இருந்த நிலையில் பிரதீப், குண்டு தயாரிக்கும் வேளையில் கொல்லப்பட்டுள்ளார். இவ்வழக்கில் சாட்சி கூறியவர்களைக் கொலை செய்வோம் என வெளிப்படையாக ப்ரதீபன் உட்பட ஆர்.எஸ்.எஸ்ஸினர் மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்டேட்ஸ்:

சம்பவ இடத்தில் காவல்துறை நடத்திய ரெய்டில் ஒரு பெட்டி நிறைய சக்தி வாய்ந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் பரிசோதனை தொடர்ந்து வருகிறது.