நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி, நம் நாட்டின் செய்தி ஊடகங்கள் அனைத்தையும் அவற்றின் நிர்வாகிகளையும் முதலாளிகளையும் சந்தித்துப் பேசினார். ஆனால், என்ன பேசினார் என்பது இறுதிவரை வெளிவரவில்லை.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டின் செய்தி ஊடகங்கள் அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுவிட்டன என்பதை, “பொய்ச் செய்தியோ உண்மைச் செய்தியோ, அவற்றைத் தீயாகப் பரவச் செய்ய நம்மால் முடியும்” என்று பெருமிதத்துடன் ஒப்புக்கொண்டார்.
அவருடைய பேச்சுக்கான விளக்கமான பொழிப்புரையை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபல ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அதன் சுருக்கமான மூன்று விளக்கங்கள் :
நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியும் அதன் இந்து தேசியவாத கூட்டணிகளும் பிரம்மாண்டமான பிரச்சார இயக்கத்தைக் கட்டமைத்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஆர்வலர்கள் வாட்ஸ்அப் மூலம் பொய்த் தகவல்களையும் மத வெறுப்புப் பதிவுகளையும் பரப்புகின்றனர்.
வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, “அப்பதிவுகள் தீப்பொறியைக் கக்குகின்ற எவ்வளவு அபாயகரமானதாக இருந்தாலும் தகவல்களின் உள்ளடக்கத்தை வாட்ஸ் அப் கண்காணித்துக் கொண்டிருக்கமுடியாது” என்று கை விரித்துள்ளது.
சமூக ஊடக ஜாம்பவான்கள் தங்களது சேவை விதிமுறைகளை மீறும் இந்தியத் தகவல்களின் உண்மைத் தன்மையைக் கண்காணிக்கத் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்திய இராணுவத்தினர், முகநூலில் போலி கணக்குகளை உருவாக்கி, இரகசியமாகப் பயன்படுத்திப் பரவலாக ஆதிக்கம் செலுத்துவதை ஃபேஸ்புக் கண்டறிந்த பிறகு, அதன் நிறுவன ஊழியர்கள் சிலர் அதைத் தடுத்து நிறுத்த முனைந்தனர். ஆனால் புது தில்லி அலுவலகத்தில் உள்ள ஃபேஸ்புக் நிர்வாகிகள் அந்த நடவடிக்கையைத் தடுத்துவிட்டனர்.

புதிதாக முளைத்துள்ள இந்து வெறியர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது வெறித்தனமான தாக்குதல்களை யூடியூப், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் தொடர்ந்து வெளியிடுகின்றார்கள்; பாஜகவின் இமேஜைப் பாதுகாப்பதற்காக பெருவாரியான பின்தொடர்பாளர்களைக் குவித்து வைத்திருப்பதாகக் காட்டுகின்றனர்.
மனித உரிமை ஆர்வலர்கள் சமூக ஊடக நிறுவனங்களிடம் அத்தகையோரை மீண்டும் மீண்டும் இனங்காட்டி எச்சரித்தாலும், அவர்களின் கணக்குகள் அரிதாகவே அகற்றப்படுகின்றன.

அரசுக்கு எதிரான ஆன்லைன் விமர்சனங்களையும் எதிர்க் கருத்துகளையும் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசாங்கம் வெறித்தனத்துடன் இயங்குகிறது. அத்தகு இடுகைகளை அகற்றுமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு அடிக்கடிக் கட்டளையிடுகிறது. விமர்சனங்கள் தீவிரமாக உள்ள பகுதிகளில் இணையத்தை முற்றிலுமாக முடக்குகிறது. இதுபோல் பல கதைகள் இன்னும் வரவிருக்கின்றன.
நன்றி : வாஷிங்டன் போஸ்ட், 26 செப்டம்பர் 2023.
Read full : https://www.washingtonpost.com/world/2023/09/26/hindu-nationalist-social-media-hate-campaign/
வாஷிங்டன் போஸ்ட் பதிவை உறுதி செய்யும் அல் ஜஸீரா :
Image : Kalaigner TV