வீட்டில் வெடிகுண்டு தயாரித்த பாஜக தொண்டர் விஷ்ணு! தவறி வெடித்து சிதறிய கைகள்!

வீட்டில் வெடிகுண்டு தயாரித்த பாஜக தொண்டர் விஷ்ணு! தவறி வெடித்து சிதறிய கைகள்!
Share this:

கண்ணூர் (14 ஏப்ரல் 2023): கேரளாவில் பயங்கரவாதச் செயல் நடத்த, வீட்டுக்குள் வைத்து வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராதவிதமாக அது வெடித்து சிதறியதில் பாஜக தொண்டர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்னது.. வீட்டிற்குள் வெடிகுண்டா.. என சிலர் ஆச்சரியப்படலாம். ஆனால் கண்ணூரில் இது சர்வ சாதாரணம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை கேரளாவின் அரசியல் படுகொலைகளின் மையமாக கண்ணூர் மாவட்டம் இருந்து வந்தது. சில ஆண்டுகளாகதான் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இருந்த கண்ணூரில், மீண்டும் வெடிகுண்டு சத்தம் கேட்டிருப்பது கேரள மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கேரளாவில் தென் பகுதியை காட்டிலும் வடக்கு நோக்கி செல்ல செல்லதான் அரசியல் களம் அனல் அடிக்கும். அந்த வகையில், கேரளாவின் வடக்கு எல்லையான கண்ணூரில் அரசியல் களம் எப்போதுமே தகித்துக் கொண்டே தான் இருக்கும். அரசியல் வன்முறைகளுக்கும், படுகொலைகளுக்கும் இங்கு பஞ்சமே இருக்காது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும், பாஜக – தொண்டர்களுக்கும் இடையேதான் இங்கு அதிக அளவில் மோதல் நடைபெறுவது வழக்கம். 2017 – 18-ம் ஆண்டு காலக்கட்டங்களில் வாரத்திற்கு ஒரு கொலை என்ற ரீதியில் கண்ணூரில் அரங்கேறி வந்தது. பின்னர் அரசு கெடுபிடியை அடுத்து, கண்ணூரில் சிறிது அமைதி நிலவி வந்தது.

பாஜக தொண்டர்

இந்நிலையில், தற்போது மீண்டும் அங்கு பாஜக வெடிகுண்டு வைத்திருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

என்ன நடந்தது?

கண்ணூர் மாவட்டம் தலச்சேரியை சேர்ந்தவர் விஷ்ணு (20). பாஜக தொண்டராக உள்ளார். இவர் கடந்த 13-ம் தேதி தனது வீட்டில் நாசம் விளைவிக்கும் பயங்கர வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு குண்டு அவரது கையிலேயே வெடித்து சிதறியது. இதில் அவரது கைகள் துண்டாகி பறந்தன.

கவலைக்கிடம் – போலீஸ் விசாரணை

வெடிகுண்டு சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்த போது, பாஜக-வின் விஷ்ணு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், விஷ்ணுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ரத்தம் அதிக அளவில் வெளியேறி உள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், பாஜக-வினர் எங்கு பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்காக விஷ்ணு வெடிகுண்டுகளை தயாரித்து வந்தார் என விசாரித்து வருகின்றனர்.

நாடு முழுக்க பல்வேறு பயங்கரவாதச் செயல்களை பாஜக / ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து நடத்தி வந்தாலும், தொடர்புடைய தீவிரவாதியை பாஜக பிரமுகர், ஆர்.எஸ்.எஸ் தொண்டர், பாஜக நிர்வாகி, சேவகர் என மிகுந்த மரியாதையோடு ஊடகங்கள் தலைப்பிடுவது குறிப்பிடத் தக்கது.

கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (லிங்க்)

நன்றி:

https://tamil.samayam.com/latest-news/crime/bjp-worker-injured-while-making-bomb-in-kannur/articleshow/99515804.cms

https://www.dinamani.com/latest-news/2023/Apr/14/bjp-worker-who-made-bomb-at-home-injured-3991363.html


Share this: