ஸஜ்தாக்களின் இடையே சிறு இருப்பில் ஓத வேண்டியதென்ன?

Share this:

ஐயம்:
 

இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் நபியவர்கள் ஓதிய தஸ்பிஹ் என்ன? அதன் சிறப்பு என்ன? இவற்றை ஆதாரப்பூர்வமாக விளக்கவும்.

தெளிவு:

 

இரண்டு ஸஜ்தாவுக்குமிடையே ''ரப்பிக்ஃபிர்லீ, ரப்பிக்ஃபிர்லீ, ரப்பிக்ஃபிர்லீ'' என்று நபி (ஸல்) அவர்கள் ஓதுவார்கள். (திர்மிதீ, அபூதாவூத். நஸயீ, இப்னுமாஜா)


பொருள்: இறைவா என்னை மன்னிப்பாயாக! இறைவா என்னை மன்னிப்பாயாக! இறைவா என்னை மன்னிப்பாயாக!

''அல்லாஹும்மஃபிர்லி வர்ஹம்னீ வஜ்புர்னீ வஹ்தினீ வர்ஜுக்னீ'' என்று இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே நபி (ஸல்) அவர்கள் ஓதுவார்கள். (திர்மிதீ)

பொருள்: இறைவா என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புபரிவாயாக! எனது குறைகளைத் தீர்த்து வைப்பாயாக! நிவர்த்தி செய்வாயாக, எனக்கு வழிகாட்டுவாயாக! எனக்கு வாழ்வாதாரங்களை த் தேவையானவற்றை வழங்குவாயாக.

 

(அபூதாவூதில் ''வஆஃபினி'' என்று இடம்பெற்றுள்ளது. பொருள்: எனக்கு நற்சுகம் நிவாரணம் அளிப்பாயாக.)

இரண்டு ஸஜ்தாவுக்குமிடையே மேற்கண்ட துஆக்களை ஓதிக்கொள்ளலாம்.

 

அல்லாஹ் மிக அறிந்தவன்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.