ருக்உ-விலிருந்து நிமிர்ந்ததும் ஓத வேண்டியது என்ன?

ஐயம்:


ருக்உ முடிந்து நிமிர்ந்த (ரப்பனா வ லக்கல் ஹம்து ஓதிய பிறகு) நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிய தஸ்பீஹ் மற்றும் அதன் சிறப்பு என்ன?

தெளிவு:

 

நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து நிமிரும் போது ''ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா'' என்று கூறுவார்கள். (புகாரி)
 

பொருள்: ''அல்லாஹ்வைப் புகழ்ந்ததை அவன் செவியுற்று விட்டான்''

''இமாம் ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா'' என்று சொல்லும் போது நீங்கள் ''அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து'' என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)

''ரப்பனா லகல் ஹம்து''

ரப்பனா வலகல் ஹம்து''

''அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து''

''அல்லாஹும்ம ரப்பனா வலகல் ஹம்து'' (புகாரி)

 

என்றும் கூறலாம்.

பொருள்: ''இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்''

''அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில் அஸ்ஸமாவாதி வமில் அல் அர்ஃதி வமில்அ மா ஷிஃத மின் ஷையின் பஃது'' (முஸ்லிம்)

பொருள்: ''இறைவா வானங்கள் நிறைய பூமி நிறைய இவையன்றி நீ எதை நாடுகின்றறாயோ அவை நிறைய உனக்கே புகழனைத்தும் உனக்கே உரியன''

''அல்லாஹும்ம ரப்பனா லகல்ஹம்து மில் அஸ்ஸமாவாதி வமில் அல் அர்ஃதி வமா பைனஹுமா வமில்அ மா ஷிஃத மின் ஷையின் பஃது அஹ்லஸ்ஸனாயி வல்மஜ்தி லா மானிஅ லிமா அஃதைத வலா முஃதிய லிமா மனஃத வலாயன்ஃபவுதல் ஜத்தி மின்கல் ஜத்'' (முஸ்லிம்)

பொருள்: இறைவா! புகழுக்கும் மதிப்பிற்கும் நீ தகுதியானவன் நீயே! நீ கொடுப்பதைத் தடுப்பவனில்லை; நீ தடுப்பதைக் கொடுப்பவனில்லை. மதிப்புடைய எவரும் எந்தப் பயனும் அளிக்க முடியாது. மதிப்பனைத்தும் உன்னிடமே உள்ளது.

''ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி'' (புகாரி)

பொருள்: இறைவா! பரக்கத்தும் வளமும் தூய்மையும் நிறைந்த அதிகமதிகப் புகழ் உனக்கே உரியது.

ருகூவிலிருந்து நிமிர்ந்த பின் இறைவனைப் புகழ்ந்து மேற்கண்ட துஆக்களை ஓதிக்கொள்ளலாம்.

 

அல்லாஹ் மிக அறிந்தவன்.