பெண்கள் (ஆடு, மாடு, கோழி போன்ற)கால்நடைகளை அறுக்கலாமா?

பதில்:

இஸ்லாம் பெண்கள் உணவிற்காகக் கால்நடைகளை அறுப்பதற்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. அது மட்டுமன்றி பெண்கள் அறுத்ததை சாப்பிடுவதற்கு அனுமதி இருப்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் உள்ளது.

கஃபு பின் மாலிக் (ரலி) அவர்களின் வேலைக்காரப் பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். ஒரு ஆடு நோய் வாய்ப்பட்டபோது அதைப் பிடித்து (கூர்மையான) கல்லால் அறுத்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது "அதை உண்ணுங்கள்" என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஃது பின் முஆத் (ரலி), நூல்: புகாரி(5501)

ஒரு பெண் அறுத்ததைச் சாப்பிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்தே பெண்கள் கால்நடைகளை அறுப்பதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. எனவே பெண்கள் தாராளமாக கால்நடைகளை உணவிற்காக அறுக்கலாம். அவ்வாறு அறுக்கப்பட்ட கால்நடைகளை உண்ணவும் செய்யலாம்.

இறைவன் மிக்க அறிந்தவன்